அந்தமான், நிக்கோபாரில் 100% தடுப்பூசி

அந்தமான், நிக்கோபாரில் 100% தடுப்பூசி

1 mins read
265208d3-0004-47d6-a6da-74dd6b192505
-

போர்ட் பிளேர்: "கோவி­ஷீல்டை மட்­டும் பயன்­ப­டுத்தி 100 விழுக்­காடு கொரோனா தடுப்­பூசி இலக்கை எட்­டிய முதல் மாநி­லம்/யூனி­யன் பிர­தே­சம் என்ற பெரு­மை­யைப் பெற்­றுள்­ளோம். உல­கின் தொலை­தூ­ரப் பகு­தி­களில் ஒன்­றாக உள்ள அந்­த­மான் மற்­றும் நிக்­கோ­பார், அசா­தா­ரண சாத­னைக்­காக கடக்க முடி­யாத முரண்­பா­டு­களை முறி­ய­டித்­துள்­ளது," என அந்­த­மான் மற்­றும் நிக்­கோ­பார் தீவு­கள் நிர்­வா­கத்­தின் அதி­கா­ர­பூர்வ டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­வி­டப்­பட்­டுள்­ளது. நாட்­டின் மற்ற பகு­தி­க­ளைப் போலவே, அந்­த­மான் தீவு­க­ளி­லும் இந்­தாண்டு ஜன­வரி மாதம்­தான் தடுப்­பூசி விநி­யோ­கம் தொடங்­கப்­பட்­டது. 100 விழுக்­காடு இலக்கு குறித்து சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்ட அறிக்­கை­யில், "2.86 லட்­சம் பேருக்கு கரோனா தடுப்­பூசி போட வேண்­டும் என்ற இலக்கை கடந்து 2.87 லட்­சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இதன் மூலம், 100.41 விழுக்­காட்டி­னருக்கு பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

தீவு­க­ளின் மக்­கள் தொகை­யில் 74.67 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

ஒரே ஒரு­வ­ருக்கு கொரோனா இருப்­பது தெரிய வந்­துள்­ள­தை­ய­டுத்து, தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று 7,701 ஆக உயர்ந்­துள்­ளது," எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.