புதுடெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் உருமாற்றக் கிருமிப் பாதிப்பு எண்ணிக்கை 145ஐ எட்டியது. ஆக அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 48 பேருக்கு ஓமிக்ரான் தொற்றியுள்ளது. டெல்லியில் 22 பேரும், ராஜஸ்தானில் 17 பேரும், கர்நாடகாவில் 14 பேரும், கேரளாவில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 2ஆம் தேதி இந்தியாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் இப்போது 145 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஓமிக்ரான் தொற்று 145ஐ எட்டியது
1 mins read
-

