ராஜ்நாத் சிங்: ஆயுதங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்

ராஜ்நாத் சிங்: ஆயுதங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்

1 mins read
dcecd16f-0459-4367-b2cb-467d908fb1f0
-

புது­டெல்லி: நாட்­டின் பாது­காப்பு கருதி ஆயு­தங்­கள், ராணுவ தள­வா­டங்­களை இந்­தி­யா­வி­லேயே உற்­பத்தி செய்ய முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து நட்பு நாடு­க­ளான அமெ­ரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்­ளிட்ட நாடு­க­ளி­டம் தெளி­வாக விளக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, இந்­தி­யா­வுக்­குத் தேவை­யான ராணுவ தள­வா­டங்­கள் இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யப்­பட வேண்­டும் என்­பதை நட்பு நாடு­க­ளுக்கு இந்­தியா தெளி­வாக உணர்த்­தி­யுள்­ளது.

வெளி­நா­டு­க­ளுக்­கும் இங்­கி­ருந்து ஏற்­று­மதி செய்­யுங்­கள் என கூறி­யுள்­ளோம். இதை நட்பு நாடு­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளன என்று பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் கூறி­யுள்­ளார்.

நட்பு நாடு­கள் இந்­தி­யா­வில் கூட்­டாக ஆலை அமைப்­பது அல்­லது தனிப்­பட்ட முறை­யில் ஆலை அமைப்­பதை இந்­தியா வர­வேற்­கிறது.

ஆனால் ராணுவ தள­வா­டங்­கள் இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யப்­பட வேண்­டும் என்­ப­தில் இந்­தியா உறு­தி­யாக உள்­ளது என்று அமைச்­சர் ராஜ்­நாத் சிங் கூறி­னார்.

கடந்த ஆண்டு மே மாதம் ராணு­வம் சார்ந்த உற்­பத்­தி­யில் அந்­நிய முத­லீட்டு வரம்பை 49 விழுக்­காட்­டில் இருந்து 74 விழுக்­கா­டாக இந்­தியா உயர்த்­தி­யது குறிப்­பி­டத்­தக்­கது.