மும்பை: 'பனாமா பேப்பர்ஸ்' ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நேரில் முன்னிலையானார்.
'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு உலக அளவில் சட்டவிரோதமாக சொத்துகளைப் பதுக்கிய, வாங்கிய ஏராளமான பிரமுகர்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களில் இருந்து இந்தத் தகவல்கள் திருடப்பட்டன.
இந்த தகவல் கசிவு மூலம் உலக அளவில் பல தலைவர்கள் பதவிகளை இழக்க நேரிட்டது. பல பிரபலங்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய அமலாக்கப் பிரிவு ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பியது. அதை ஏற்று நேற்று மும்பை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அவர் நேரில் முன்னிலையானார்.

