இனி வாரந்தோறும் நான்கு பணி நாள்கள்; மாதாந்திர ஊதியம் குறையக்கூடும் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

இனி வாரந்தோறும் நான்கு பணி நாள்கள்; மாதாந்திர ஊதியம் குறையக்கூடும் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

2 mins read
a3674554-a0aa-4640-a1ef-77c54cd2c129
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தொழி­லா­ளர் சட்ட விதி­மு­றை­களில் முக்­கிய மாற்­றங்­கள் செய்­யப்­பட உள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. அதன் பின்­னர் வாராந்­திர பணி நாள்­கள் 4ஆக குறைக்­கப்­படும் என்றும் மாதாந்­திர ஊதி­யத்­தில் மாற்­றம் உண்டாகும் என்­றும் கூறப்­படு­கிறது.

தொழி­லா­ளர்­க­ளின் ஊதி­யம், சமூ­கப் பாது­காப்பு, தொழில்­துறை உற­வு­கள், பணி­யி­டப் பாது­காப்பு ஆகிய நான்கு அம்­சங்­கள் தொடர்­பில் அடுத்த நிதி­யாண்டு (2022) முதல் தொழி­லா­ளர் சட்ட விதி­மு­றை­களில் மாற்­றங்­கள் செய்ய மத்­திய அரசு முடிவு செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத்­த­க­வலை மத்­திய அர­சின் மூத்த அரசு அதி­காரி ஒரு­வர் பிடிஐ செய்தி முக­மை­யி­டம் கூறி­ய­தாக ஹிந்­துஸ்­தான் டைம்ஸ் ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

புதிய சட்ட விதி­மு­றை­கள் அமல்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர் தொழி­லா­ளர்­கள் வாரந்­தோ­றும் நான்கு நாள்­கள் மட்­டுமே பணிக்கு வந்­தால் போது­மா­னது.

அதே­ச­ம­யம் அன்­றாட பணி எட்டு மணி நேரம் என்­பது இனி 12 மணி நேர­மாக அதி­க­ரிக்­கப்­படும்.

மேலும், அனைத்து பிடித்­தங்­களும் போக, கைக்கு வரும் ஊதி­யம் குறை­யும் என்­றும் ஊழி­யர் சேம நிதி தொடர்­பில் நிறு­வ­னங்­க­ளுக்கு கூடு­தல் சுமை ஏற்­படும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

தின­மும் 12 மணி நேரம் பணி­யாற்­றி­னால் மட்­டுமே வாரந்­தோ­றும் ஒரு தொழி­லா­ளர் 48 மணி நேரம் உழைக்க வேண்­டும் என்ற விதி­மு­றையை ஈடேற்ற முடி­யும் என புதிய சட்ட விதி­மு­றை­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய விதி­மு­றை­கள் அம­லுக்கு வந்­த­தும் தொழி­லா­ளர்­கள் தங்­க­ளு­டைய அடிப்­படை ஊதி­யம், சேம நிதி ஆகி­ய­வற்றைக் கணக்­கி­டும் முறை­யில் பெரிய மாற்­றம் ஏற்­படும் என நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

தொழி­லா­ளர்­கள் நலன் என்­பது மாநில அர­சு­களும் சம்­பந்­தப்­பட்­டது என்­ப­தால், இந்­தப் புதிய சட்ட விதி­மு­றை­கள் பற்றி மாநில அர­சு­களும் தங்­கள் பங்­கிற்கு கருத்­து­க­ளை­யும் திருத்­தங்­க­ளை­யும் தெரி­விக்­கு­மாறு மத்­திய அரசு கூறி­யுள்­ளது.

தொழி­லா­ளர் சட்­டங்­கள் தொடர்­பான வரைவு விதி­மு­றை­களைப் பெரும்­பா­லான மாநி­லங்­கள் ஏற்றுக் கொண்­ட­தாக அந்த மூத்த அதி­காரி தெரி­வித்­தார் என பிடிஐ செய்தி முகமை தெரி­வித்­துள்­ளது.

கடந்த பிப்­ர­வரி (2021) மாதமே இந்­தப் பணியை முடித்­து­விட்­ட­தால், மத்­திய, மாநில அர­சு­கள் ஒரே சமயத்­தில் இந்த சட்ட விதி­மு­றை­களை அமல்­ப­டுத்த வேண்­டும் என மத்­திய அரசு விரும்­பு­வ­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

தற்­போது இந்­தி­யா­வில் தொழி­லா­ளர்­கள் வாரந்­தோ­றும் ஐந்து நாள்­கள் பணிபுரிகின்­ற­னர். புதிய விதி­மு­றை­கள் அம­லுக்கு வந்­த­தும், அவர்­க­ளின் பணிக்­க­லா­சா­ரத்­தில் சில மாற்­றங்­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இப்­பு­திய சட்ட விதி­மு­றை­க­ளின் சாதக, பாதக அம்­சங்­கள் குறித்த விவா­தங்­கள் தொடங்கி உள்­ளன.