தூண்டிவிடும் பாகிஸ்தான்: விஜயகுமார் குற்றச்சாட்டு

1 mins read
da81b76d-c7bf-48f7-bf4f-bb2c884bb582
-

ஸ்ரீநகர்: காஷ்­மீ­ரில் தீவி­ர­வாத செயல்­பா­டு­களை பாகிஸ்­தான் தொடர்ந்து தூண்­டி­வி­டு­வ­தாக காவல்­துறை தலை­வர் விஜ­ய­குமார் தெரி­வித்­துள்­ளார்.

ஸ்ரீந­க­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கடந்த 33 நாள்­களில் ஸ்ரீந­கர் பகு­தி­யில் மட்­டும் பாகிஸ்தான் தீவிரவாதி­கள் மூன்று பேர் சுட்­டுக் கொல்­லப்­பட்டுள்­ள­தாகக் குறிப்­பிட்­டார்.

இம்மூன்று தீவி­ர­வா­தி­களும் காவல்­துறை, பாது­காப்­புப் படை­யினர் மீது பல்­வேறு தாக்­கு­தல்­களை நடத்தி உள்­ள­னர் என்­றும் அதற்­கான ஆதா­ரங்­கள் உள்ளதா­க­வும் தெரி­வித்­தார். மேலும் இம்­மூ­வ­ரும் பல அப்­பாவி பொது­மக்­களைப் படு­கொலை செய்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

ஒரே மாதத்­தில் மூன்று பாகிஸ்­தான் தீவி­ர­வா­தி­கள் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தன் மூலம் காஷ்­மீ­ரில் தீவி­ர­வா­தத்தை பாகிஸ்­தான் தொடர்ந்து தூண்­டி­வி­டு­கிறது என்­பது தெரி­ய­வந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

நேற்று முன்­தி­னம் காஷ்­மீ­ரின் ஸ்ரீந­கர் ஹர்­வான் பகு­தி­யில் தீவி­ர­வா­தி­க­ளுக்­கும் காவல்­து­றை­யி­ன­ருக்­கும் இடையே துப்­பாக்­கிச்­சூடு நடந்­தது. அப்­போது அங்கு பதுங்கி இருந்த சபி­யுல்லா என்ற தீவி­ர­வாதி சுட்­டுக்­கொல்­லப்­பட்­டான்.

அவன் பாகிஸ்­தா­னின் கராச்சி பகு­தியைச் சேர்ந்த லஷ்­கர் - இ- தொய்பா இயக்­கத்­தைச் சேர்ந்த தீவி­ர­வாதி என்­ப­தும் காஷ்­மீரில் பல்­வேறு குண்­டு­வெ­டிப்­புச் சம்பவங்­க­ளுக்­குக் கார­ண­மா­ன­வன் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.