இந்திய சுற்றுப்பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடாக ஐக்கிய அரபு சிற்றரசுகள் இருக்கிறது.
இந்திய வெளியுறவு துணை அமைச்சர் வீ.முரளிதரன் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலில் இது தெரியவந்துள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் 314,495 இந்திய சுற்றுப்பயணிகள் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குப் பயணம் செய்தனர்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் அதிகம்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதியில் இருந்து விமானச் சேவைகளை இந்தியா நிறுத்திவைத்தது.
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கும் இடையே பயண ஏற்பாடுகள் நடப்பில் உள்ளன.
ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு அடுத்ததாக இந்தியர்கள் செல்ல விரும்பும் நாடுகள் தாய்லாந்தும் பங்ளாதேஷும் ஆகும். ஆனால், ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குச் செல்வோரைவிட தாய்லாந்து, பங்ளாதேஷுக்குச் சொல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைவு.