மத்திய அரசு: ஓமிக்ரானை எதிர்கொள்ளத் தயார்

மத்திய அரசு: ஓமிக்ரானை எதிர்கொள்ளத் தயார்

2 mins read
61e7ed2e-b23d-4d4b-8ce4-457303a44310
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இரு­நூறுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஓமிக்­ரான் பாதிப்பை எதிர்த்­துப் போராட நாடு தயா­ராக உள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நாடா­ளு­மன்ற மாநி­லங்­களவை­யில் கொரோனா நில­வ­ரம் தொடர்­பாக நடை­பெற்ற விவா­தத்­தின்­போது பேசிய அவர், ஓமிக்­ரான் பாதிப்பை தடுப்­ப­தற்­கான பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு மேற்­கொண்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டார்.

மேலும், மாநில அர­சு­கள், மருத்­துவ நிபு­ணர்­க­ளு­டன் மத்­திய அரசு தொடர்ந்து கலந்­தா­லோ­சித்து வரு­வ­தாக தெரி­வித்த அவர், நாடு முழு­வ­தும் சிகிச்­சைக்­குத் தேவை­யான மருந்­து­களும் மருத்­துவ உயிர்­வாயு உரு­ளை­களும் போது­மான அளவு கையி­ருப்­பில் இருப்­ப­தாக குறிப்­பிட்­டார்.

மேலும், மாநி­லங்­க­ளுக்கு இது­வரை 48,000 செயற்கை சுவா­சக் கரு­வி­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் பாதிப்­பில் இருந்து 77 பேர் முழு­மை­யாக குண­ம­டைந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

மாநி­லங்­களில் ஆக அதி­க­மாக, மகா­ராஷ்­டிரா, டெல்­லி­யில் தலா 54 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தெலுங்­கா­னா­வில் 20 பேர், கர்­நா­ட­கா­வில் 19 பேர், ராஜஸ்­தா­னில் 18 பேர், கேர­ளா­வில் 15 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு கூறி­யுள்­ளது.

குஜ­ராத்­தில் 14 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று உறு­தி­யான நிலை­யில், உத்­த­ரப் பிர­தே­சத்­தி­லும் ஒடி­சா­வி­லும் தலா இரு­வர் அதே தொற்­றுக்கு ஆளாகி உள்­ள­னர். பிற மாநி­லங்­களில் தலா ஒரு­வரை ஓமிக்­ரான் பாதித்­துள்­ளது.

நாட்­டில் இது­வரை ஓமிக்­ரான் பாதிப்­பால் உயி­ரி­ழப்­பு­கள் ஏதும் பதி­வா­க­வில்லை.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் அச்­சம் கார­ண­மாக குஜ­ராத்­தில் இர­வு­நேர ஊட­ரங்கு மீண்­டும் அம­லுக்கு வந்­துள்­ளது. அங்கு 31ஆம் தேதி­வரை இந்த ஊர­டங்கு அம­லில் இருக்­கும்.