பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வடக்கு-வடகிழக்குப் பகுதியில் நேற்றுக் காலை 7:09 மணிக்கு 3.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்எஸ்சி) தெரிவித்தது.
பெங்களூருவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் 11 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
பிறகு காலை 7:14 மணிக்கு இரண்டாவது முறை நிலநடுக்கம் 3.3 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்டது.
பெங்களூருவில் இருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் 23 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.

