லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத வந்த 27 வயது இளைஞர் அதி நவீன முறைகளைக் கையாண்டு தேர்வில் கேட்டு எழுத முயன்றார்.
அவரை காவல்துறையினர் சோதனை போட்டதில் புளூடூத் கருவியுடன் கூடிய பொய் தலைமுடியை அவர் அணிந்திருந்தார்.
காதுக்குள் இருந்த இரண்டு ஒலி கேட்புக் கருவிகளை வெளியே எடுக்க அதிகாரிகளால் முடியவில்லை. (படம்)
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் பரபரப்பாகி இருக்கிறது. அந்த மாணவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

