பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மாது

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மாது

1 mins read
2d92150a-6af9-488d-b9d8-8405f4fdabc5
-

தம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நடனமாடிக்கொண்டு இருந்த மாது ஒருவர், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், முஸஃபர்நகரில் நிகழ்ந்தது.

அந்த மாதுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் டுவிட்டர் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த மாதின் கண்மூடித்தனமான செயலை இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அந்த மாது தொடர்ந்து நடனமாடுவது காணொளியில் தெரிந்தது. வீதியில் இருந்தவர்கள் சர்வ சாதாரணமாக அந்த மாதைக் கடந்து சென்றனர்.

அந்த மாதின் விளையாட்டுத்தனத்தால் ஒருவேளை எவர் மீதாவது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இருந்தால், துயரச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுவிடக்கூடும் என்று இணையவாசிகள் கவலை தெரிவித்தனர்.

அந்த மாதுக்கு துப்பாகி எப்படி கிடைத்தது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.