236 பேருக்கு ஓமிக்ரான்

236 பேருக்கு ஓமிக்ரான்

2 mins read
1507d6cc-dd79-4f79-9229-f075b129583a
-

60% தடுப்பூசி போட்டனர்; புதிதாக 7,495 பேருக்கு கொவிட்-19 தொற்று

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் தொற்று 236க்கு அதி­க­ரித்­துள்­ள­தால் நேற்று மத்­திய அரசு அவ­சர ஆலோ­சனை நடத்­தி­யது.

இதில் மாநில அர­சு­கள் கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரிக்க வேண்­டும் என்று முடிவு செய்­யப்­பட்­டது.

இது குறித்து வெளி­யி­டப்­பட்ட சுற்­ற­றிக்­கை­யில் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை, அதன் வேகம் உள்­ளிட்­ட­வற்றை மாநில அர­சு­கள் கண்­காணிக்க வேண்­டும். வரு­கிற பண்­டிகை காலங்­களில் உள்­ளூர் அள­வில் ஊர­டங்கு விதிப்­ப­தைக் குறித்து பரி­சீ­லிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

கட்­டுப்­பாட்டு பகு­தி­களில் இரவு நேர ஊர­டங்­குக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

"மக்­கள் கூடும் இடங்­களில் கடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்க வேண்­டும். கட்­டுப்­பாட்டுப் பகு­தி­களில் ஓமிக்­ரான் பர­வும் விகி­தத்தைக் கண்­ட­றிந்து மத்­திய அர­சுக்குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.

"ஒவ்­வொரு மாநி­ல­மும் 100 விழுக்காடு தடுப்­பூசி செலுத்­தப்­பட்­டி­ருப்­பதை உறுதி செய்ய வேண்­டும். தடுப்­பூசி குறை­வாக செலுத்தப்­ பட்­டுள்ள மாநி­லங்­கள் போர்க்­கால அடிப்­ப­டை­யில் வீடு வீடாகச் சென்று தடுப்­பூ­சி­கள் செலுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்" என்­றும் மத்திய அரசு கூறியுள்ளது.

தென் ஆப்­பி­ரிக்­கா­வி­லும் இங்­கி­லாந்து உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­க­ளி­லும் ஓமிக்­ரான் தொற்று பர­வத்­தொ­டங்­கி­ய­தும் ஆபத்­தான நாடு­கள் என கண்­ட­றி­யப்­பட்­டுள்ள இந்த நாடு­களில் இருந்து இந்­தியா வரு­வோ­ருக்கு கொவிட்-19 பரி­சோ­தனை கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது.

இந்­தி­யா­வில் உரு­மா­றிய அதி­வே­கத்­தில் பர­வும் தன்­மை­கொண்ட ஓமிக்­ரான் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை தற்­போது 236க்கு அதி­க­ரித்­துள்­ளது என்று மத்­திய சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­தது. இதன்­படி மகா­ராஷ்­டி­ரா­வில் 65, டெல்லி 64, தெலுங்­கானா 24, ராஜஸ்­தான் 21, கர்­நா­டகா 19, கேரளா 15, குஜ­ராத் 14, ஜம்மு-காஷ்­மீர் 3, ஒடிசா 2, உத்­த­ரப்­பி­ர­தே­சம் 2, ஆந்­திரா 2 ஓமிக்­ரான் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

மேலும் மகாராஷ்டிரா மாநி­லத்­தில் ஓமிக்ரான் தொற்­றால் பாதிக்கப்­ பட்ட 65 பேரில் இது­வரை 35 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர் என்­றும் டெல்­லி­யில் ஓமிக்ரான் தொற்­றால் பாதிக்கப்பட்ட 64 பேரில் இது­வரை 23 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர் என்றும் அமைச்சு தெரி­வித்­தது.

இதற்­கிை­டயே கடந்த 24 மணி நேரத்­தில் மேலும் 7,495 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்பட்­டுள்­ளது.

இந்­தப் பாதிப்பு நேற்­றை­விட 18.6% உயர்­வா­கும். இதில் கேர­ளா­வில் மட்­டும் 3,205 பேர் பாதிக்கப் ­பட்­டுள்­ள­னர்.

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஓமிக்ரான் கிருமிப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்று டன் சேர்த்து மொத்த ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.