மியன்மார் மக்களுக்கு ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

மியன்மார் மக்களுக்கு ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வழங்கிய இந்தியா

1 mins read
36243a53-f710-424a-8aa6-d3a61ec86f0f
-

நேப்­பி­டாவ்: ராணுவ ஆட்சி நடை­பெற்று வரும் மியன்­மார் நாட்­டுக்கு இந்­தியா ஒரு மில்­லி­யன் முறை போடக்­கூ­டிய தடுப்­பூ­சி­களை வழங்­கி­யுள்­ளது.

இம்­மா­தம் 22ஆம் தேதி மியன்­மார் சென்ற இந்­திய வெளி­யு­றவு செய­லா­ளர் ஹர்ஷ் வர்­தன் ஷிரிங்லா தடுப்­பூசிகளை முறைப்­படி ஒப்­ படைத்­தார் என 'த இந்து' வெளி யிட்ட தகவல் தெரிவித்தது.

பிப்­ர­வரி மாதம் ஆங் சான் சூச்சி தலை­மை­யி­லான ஆட்­சியை ராணு­வம் கவிழ்த்த பிறகு அங்கு சென்ற முதல் வெளி­நாட்­டுத் தூதர் ஹர்ஷ் வர்­தன் என நம்­பப்­ப­டு­கிறது.

"இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­பட்ட ஒரு மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் மியன் மார் செஞ்­சி­லு­வைச் சங்­கப் பிர­தி­நி­தி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்பட்­டது," என்று மியன்­மா­ரில் உள்ள இந்­திய தூத­ர­கம் அறிக்கை வாயிலாக தெரி­வித்­தது.

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ராகப் போராடி வரும் இந்­திய- மியன்­மார் எல்­லை­யில் உள்ள மக்­கள் உட்­பட மியன்­மார் மக்­க­ளுக்கு ஆத­ர­வாக தடுப்­பூ­சி­கள் வழங்­கப்­பட்டதாகவும் அது கூறி­யது.

இந்திய எல்லையோரம் அமைந்து உள்ள பங்ளாதேஷ், பூட்டான், நேப் பாளம் போன்ற நாடுகளுக்கும் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கொவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.