லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத் தில் ராமர் கோயில் கட்டுவதற்காக வாங்கப்பட்ட நிலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் களில் ஒருவரான பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
"ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை உருவாக்கப்பட்டு நிலங்கள் வாங்கப்பட்டன. இதில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு நிலப் பகுதி, ரூ.26 கோடிக்கு அறக் கட்டளையிடம் விற்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.
"நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ராமர் கோயில் கட்டுவதற்கு நன் கொடை வழங்கியுள்ளனர். இந்த நில ஒப்பந்தங்களுக்கு யார் சாட்சிகள் என்று பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர் பதவி யில் உள்ள நபர் ஒருவரும் அயோத்தியின் மேயரும்தான். நில மோசடிக்கு மக்களின் பணம்தான் செலவு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த முறைகேட்டை உடனடியாக விசாரிக்க வேண்டும்.
"ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நில முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிடுவதாக கூறியது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் இந்த நில முறைகேடு வழக்கிலும் மாநில அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ராமர் கோயில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதனால் இந்த முறைகேட்டை உச்சநீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும்," என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

