14 வயது சிறுவன் கொலை; நண்பர்கள் கைது

1 mins read
34ceb588-92e2-459a-9d31-dee00341dac1
-

தியோ­கர்: ஜார்­கண்ட் மாநிலம் தியோ­கர் மாவட்­டத்­தில் 14 வயது சிறு­வனை நண்­பர்­களே கொன்று உடலை காட்­டுப் பகு­தி­யில் வீசி­விட்­ட­னர்.

சிறு­வன் காணா­மல் போன­தாக அவ­னு­டைய பெற்­றோர் புதன்­கிழமை அன்று காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­த­னர்.

இதை­ய­டுத்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக காவல்­துறை அதி­காரி பவன்­கு­மார் தெரி­வித்­தார்.

இந்த விசா­ர­ணை­யில் சிறு­வ­னின் நண்­பன் குமார் மீது காவல்­து­றை­யி­ன­ருக்குச் சந்­தே­கம் ஏற்­பட்­டது. நண்­ப­னுக்­கும் வயது 14 என்று காவல் அதி­கா­ரி­கள் கூறினர்.

விசா­ர­ணை­யில் ெசவ்­வாய்க் கிழமை காலை 8.30 மணி­ய­ள­வில் ரோஹினி கிரா­மத்­தில் வீட்­டுக்கு வெளியே சிறு­வ­னைச் சந்­தித்­த­தா­க­வும் கும்­ர­பாத் ஸ்டே­ஷன் ரோட்­டுக்­குச் சென்­ற­போது அவி­னாஷ் எனும் மற்­றொரு நண்­பன் சேர்ந்துகொண்­ட­தா­க­வும் குமார் தெரி­வித்­தான்.

பலங்கா பஹாத் காட்­டுப் பகுதி வழி­யா­கச் சென்­ற­போது சிறு­வ­னுக்­கும் அவி­னாஷ்க்­கும் வாக்­கு ­வா­தம் மூண்­டது. அப்­போது அவி­னாஷ் கத்­தியை எடுத்து சிறு­வ­னைக் குத்தி, கழுத்தை அறுத்­து­ விட்­டான். சிறு­வ­னைக் கொன்­ற­பி­றகு கை, கால்­களை வெட்டி மூன்று மூட்­டைக­ளா­கக் கட்டி காட்­டில் அவி­னாஷ் வீசி­விட்­டான் என்று குமார் கூறி­னான்.

இதை­ய­டுத்து சிறு­வ­னின் சட­லத்தை மீட்டு அவி­னாஷை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர் என்று என்­டி­டிவி தக­வல் தெரி­வித்­தது. ரத்­தம் தோய்ந்த கத்தி, சிறு­வ­னின் கைபேசி உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் ஆதாரமாக மீட்டுள்ளனர்.

குற்­றத்தை அவி­னாஷ் ஒப்­புக் கொண்­ட­தால் அவன் மீது கொலை குற்­றம் உள்­ளிட்ட குற்றச் ­சாட்­டு­கள் சுமத்­தப்­படும் எனத் தெரி­கிறது.