நெடுஞ்சாலைகளில் மின் ஏற்றும் நிலையங்கள்; ஏற்பாடு தீவிரம்

நெடுஞ்சாலைகளில் மின் ஏற்றும் நிலையங்கள்; ஏற்பாடு தீவிரம்

1 mins read
f0cdbe6e-c7d7-483f-bc12-dd408802f475
நெடுஞ்சாலைகளில் மின்னேற்றும் நிலையங்களை அமைக்க இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: தேசிய நெடுஞ்­சா­லை­களில் மின்­சார வாக­னங்­க­ளுக்­கான மின்­னேற்­றும் நிலை­யங்­களை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து மற்­றும் நெடுஞ் ­சா­லை­கள் துறை அமைச்­சர் நிதின் கட்­கரி தெரி­வித்­துள்ளார்.

நாடா­ளு­மன்­றத்­தின் மாநி­லங்­க­ள­வை­யில் உறுப்­பி­ன­ரின் கேள்­விக்கு புதன்கிழமை அன்று அவர் எழுத்­துப்­பூர்­வ­மாக பதி­ல­ளித்­தார்.

"மின்­சார வாக­னங்­கள் மற்­றும் மாற்று எரி­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்து ­வ­தற்கு கடந்த இரண்டு ஆண்­டு­களில் சாலைப் போக்­கு­வ­ரத்து மற்றும் நெடுஞ்­சா­லை­கள் அமைச்சு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது.

"மின்கலத்தால் இயங்­கும் வாகனங்­க­ளுக்­குப் பதிவுச் சான்­றி­தழ் கட்­ட­ணம் செலுத்­து­வ­தில் இருந்து சாலைப் போக்­கு­வ­ரத்து மற்­றும் நெடுஞ்­சா­லை­கள் அமைச்சு விலக்கு அளித்­துள்­ளது.

"மின்கலம் இல்­லாத மின்­சார வாக­னங்­க­ளின் விற்­பனை மற்­றும் பதிவு தொடர்­பான ஆலோ­ச­னையை அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்­கும் சாலைப் போக்­கு­வ­ரத்து மற்­றும் நெடுஞ்­ சாலை­கள் அமைச்சு வழங்­கி­யுள்­ளது.

"இந்­திய தேசிய நெடுஞ்­சா­லை­கள் ஆணை­யத்­தால் வழங்­கப்­படும் சாலை­யோர வச­தி­க­ளின் ஒரு பகுதி ­யாக சாலை உரு­வாக்க நிறு­வ­னத்­தால் மின்­சார வாகன மின்­னேற்றும் நிலைய வச­தி­கள் வழங்­கப்­பட உள்­ளன. இது­போன்ற 39 வச­தி­களை ஏற்­கெ­னவே ஆணை­யம் வழங்­கி­யுள்­ளது. மேலும் 103 வச­திக­ளுக்­கான ஒப்­பந்­தங்­கள் வழங்­கப்­படவுள்­ளன. ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்ட பணி­கள் 2022-23 நிதி­யாண்­டின் இறு­திக்­குள் முடி­வ­டை­யும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என அமைச்சர் தெரி­வித்துள்ளார்.