திருப்பதியில் இலங்கை பிரதமர் ராஜபக்சே

1 mins read
8483ccc0-c52b-45e2-ad48-cba13597533a
இலங்கை பிரதமர் ராஜபக்சே ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக திருப்பதி வந்துள்ளார். படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா -

திருப்­பதி: இலங்கை பிர­த­மர் ராஜ­பக்சே இரண்டு நாள் பய­ணம் மேற்­கொண்டு நேற்று திருப்­பதி வந்து சேர்ந்­தார்.

திருப்­பதி விமான நிலை­யத்­தில் துணை முதல்­வர் கே. நார­ய­ண­சு­வாமி தலை­மை­யி­லான சித்­தூர் மாவட்ட நிர்­வா­கி­கள், மாவட்ட ஆட்­சி­யர் ஹரி­நா­ரா­ய­ணன் மற்­றும் திருப்­பதி தேவஸ்­தான அதி­கா­ரி­கள் அவரை வர­வேற்­ற­னர்.

திரு­ம­லை­யில் உள்ள கிருஷ்ணா நிவாஸ் விருந்­தி­னர் மாளி­கை­யில் இரவு ஓய்­வெ­டுத்த பிறகு இன்று வெள்­ளிக்கிழமை காலை முக்கிய விருந்தினருக் கான(விஐபி) தரி­ச­னத்­தில் அவர் ஏழு­ம­லை­யானை தரி­ச­னம் செய்­கி­றார்.

அவ­ருக்கு திருப்­பதி தேவஸ்­தான அதி­கா­ரி­கள் லட்டு, சாமி படம் மற்­றும் பிர­சா­தங்­கள் வழங்கு­ வார்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. அதன் பிறகு விமா­னம் மூலம் அவர் இலங்கை திரும்­பு­கி­றார். ராஜ­பக்சே வரு­கை­யை­யொட்டி திருப்­பதி மற்­றும் திரு­ம­லை­யில் பலத்த காவல்­துறை பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது.

கடந்த நவம்பரில் பிரதமர் பொறுப்பு ஏற்ற பிறகு பிப்ரவரியில் முதல் வெளிநாட்டுப் பயணம் மேற் கொண்டு திருப்பதி வந்த ராஜ பக்சே ஏழுமலையானைத் தரிசித்து விட்டுச் சென்றார்.