செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6db69dbb-5b79-4c19-95d4-426a8193968b
-

'தடுப்பூசி போட்டால் ஊதியம்'

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழை இணையத்தளத்தில் பதிவேற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவுவதால் அங்குள்ள முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் இவ்வாறு அறிவித்துள்ளது. "அரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்று அல்லது இரு முறை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை அரசு இணையத்தளத்தில் பதிவேற்ற வேண்டும். இல்லையென்றால் சம்பளம் இல்லை," என அரசு தெரி வித்துள்ளது.

மது அருந்தும் வயது 21

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் மதுபானம், இதர

வகை போதைப்பொருள்களை பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 25லிருந்து 21ஆக குறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் தலைநகர் டெல்லியிலும் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கான வயது வரம்பு 21ஆக குறைக்கப் பட்டது.

இந்திய சிறைகளில் 5,150

வெளிநாட்டுக் கைதிகள்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பல்­வேறு சிறை­களில் பல நாடு­க­ளைச் சேர்ந்த 5,150 பேர் அடைக்­கப்­பட்­டுள்­ள­தாக மக்­க­ள­வை­யில் எழுத்­துப்­பூர்­வ­மாக அளித்த பதி­லில் இந்­திய அரசு தெரி­வித்­தது.

இதில் அதி­க­பட்­ச­மாக பங்­ளா­தேஷ் நாட்­டைச் சேர்ந்த 2,513 பேரும் நைஜீ­ரி­யாவைச் சேர்ந்த 811 பேரும் சிறை களில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர். நேப்­பாள நாட்­டைச் சேர்ந்த 745 பேர், மியன்­மார் நாட்­டைச் சேர்ந்த 306 பேர், பாகிஸ்தானைச் சார்ந்த 203 பேர், ஆப்­பி­ரிக்க நாடு ­க­ளைச் சேர்ந்த 150 பேர் இந்­தி­யச் சிறை­களில் உள்­ள­னர். இலங்­கை­யைச் சேர்ந்த 65 பேரும் மத்­திய கிழக்கு நாடு­க­ளைச் சேர்ந்த 36 பேரும் சீனா­வைச் சேர்ந்த 30 பேரும் வட அமெ­ரிக்கா நாடு­க­ளைச் சேர்ந்த 8 பேரும் சிறை­யில் அடைக்கப்பட்டுள்ளனர்.