செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
415ad8a5-3d92-402f-b9dc-f2d316638c1d
-

ஏ.டி.எம். கட்டணம் உயர்கிறது

புதுடெல்லி: ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ஜனவரி 1 முதல் உயர்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஏ.டி.எம்., பராமரிப்புச் செலவுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் 2014க்கு பின் உயர்த்தப்படவில்லை. செலவு அதிகரிப்பதால் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனைத்து வங்கிகளும் அனுமதி கோரியிருந்தன. வங்கிகளின் கோரிக்கையை ஏற்று கட்டணத்தை உயர்த்த ஜூனில் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஜனவரி 1 முதல் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

அதன்படி கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில் மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்., என்றால் மாநகரங்களில் மூன்று முறையும், நகரங்களில் ஐந்து முறையும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். அனுமதிக்கப்பட்ட இந்தத் தவணை முடிந்தபின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனைக் கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இது ஜனவரி 1 முதல் 21 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் 8 ரூபாய் வசூலிக்கப்படும்," என்று அறிவித்துள்ளது.

இரட்டையருக்கு வேலை

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சோஹ்னா-மோஹ்னா என்ற தலை இரண்டு உடல் ஒன்று என்று ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு மின்சார வாரியத்தில் மாதம் ரூ.20,000 தொடக்க சம்பளமாக அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு

உத்தரப்பிரதேசம்: இன்றுமுதல் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசங்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருமண விழாவில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.