புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 கிருமியால் மேலும் 7,091 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவ்வேளையில் 17 மாநிலங்களில் உருமாறிய ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 422 பேர் அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஓமிக்ரான் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் பரவியுள்ளது. ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 130 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

