செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
317aa55d-7739-43ff-9dbc-7e3276f710af
-

சல்மான் கானை பாம்பு கடித்தது

புது­டெல்லி: இந்­தி­யா­வின் பிர­பல பாலி­வுட் நடி­கர் சல்­மான் கான், தமக்­குச் சொந்­த­மான பண்ணை வீட்­டிற்­குச் சென்­ற­போது அங்கு அவ­ரைப் பாம்பு கடித்­து­விட்­டது.

இந்­தி­யா­வின் மகா­ராஷ்­டிர மாநி­லம், ராய்­கட் மாவட்­டத்­தில் பன்­வேல் என்ற இடத்­தில் அவ­ருக்குச் சொந்த மான பண்ணை வீடு ஒன்று உள்­ளது. கொரோனா காலத்­தில் அந்த வீட்­டில் இருந்­து­கொண்டு விவ­சாய, தோட்­டப் பணி­களில் சல்­மான் கான் ஈடு­பட்டு வந்­தார்.

இந்­நி­லை­யில் நேற்று உள்­ளூர் நேரப்­படி அதி­காலை மூன்று மணி­ய­ள­வில் சல்­மான் கானை பாம்பு கடித்­து­விட்­டது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, உட­ன­டி­யாக இவர் நவி மும்­பை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவ­ருக்கு விஷ முறிவு சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. சிகிச்சை முடிந்து நேற்று காலை சல்­மான் கான் வீடு திரும்­பி­விட்­டார். இன்று தனது 56வது பிறந்த நாளை சல்­மான் கான் கொண்­டா­ட­வி­ருக்­கும் நிலை­யில் அவரை பாம்பு கடித்­துள்­ளது.

பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீந­கர்: ஜம்மு காஷ்­மீ­ரின் ஆனந்த்­நாக் பகு­தி­யில் பயங்­க­ர­வா­தி­கள் நட­மாட்­டம் இருப்­ப­தாக பாது­காப்பு படை­யி­ன­ருக்கு நேற்று முன்­தி­னம் ரக­சிய தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த பாது­காப்­புப் படை­யி­னர், தீவிர வேட்­டை­யில் இறங்­கி­னர். அப்­போது அங்கு பதுங்­கி­யி­ருந்த பயங்­க­ர­வா­தி­கள் பாது­காப்­புப் படை­யி­ன­ரைக் குறி­வைத்து துப்­பாக்­கி­யால் சுட்­ட­னர். பாது­காப்புப் படை­யி­ன­ரும் பதில் தாக்­கு­தல் நடத்­தி­னர். இரு தரப்­பி­ன­ருக்­கும் இடையே தொடர்ந்து துப்­பாக்­கிச்­சண்டை நடை­பெற்­றது.

இந்த துப்­பாக்­கிச் சண்­டை­யில் தேடப்­பட்டு வந்த ஐஎஸ்­ஐ­எஸ் தீவி­ர­வாத இயக்­கத்­தைச் சேர்ந்த பயங்­க­ர­வா­தியை பாது­காப்பு படை­யி­னர் சுட்­டுக் கொன்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. அவ­னது பெயர் பஹீம் பாத் என்­பது விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது. இந்­தப் பயங்­க­ர­வா­திக்கு பிஜ்­பே­காரா காவல் நிலை­யத்­தைச் சேர்ந்த முக­மது அஷ்­ரப் என்ற காவல் அதி­காரி கொல்­லப்­பட்ட வழக்­கில் தொடர்­பி­ருக்­க­லாம் என காஷ்­மீர் காவல்­துறை சந்­தே­கிக்­கிறது.

டெல்லியில் காற்றின் தரம் மோசம்

புது­டெல்லி: தலை­ந­கர் டெல்­லி­யில் தொடர்ந்து கடந்த சில நாட்­க­ளாக காற்­றின் தரம் மிக­வும் மோச­ம­டைந்து வரு­கிறது. இந்த நிலை­யில் நேற்று காற்று தரக் குறி­யீடு 430ஆக பதி­வாகி இருப்­ப­தாக காற்­றுத் தரம் மற்­றும் வானிலை முன்­ன­றி­விப்பு ஆய்வு அமைப்பு தெரி­வித்து உள்­ளது. டெல்­லியை ஒட்­டிய புற­ந­கர் பகு­தி­க­ளான குரு­கி­ரா­மில் 375ஆக­வும் நொய்­டா­வில் 570ஆக­வும் காற்­றுத் தரக் குறி­யீடு பதி­வாகி உள்­ளது.

காற்று தரக் குறி­யீடு 0 முதல் 50 வரை இருந்­தால் காற்று நல்ல தரத்­து­டன் உள்­ளது என்று பொருள்.

100க்குள் இருக்க வேண்­டிய காற்று தரக் குறி­யீடு அளவு, தொடர்ந்து 400க்கும் மேல் பதி­வாகி வரு­வ­தால் தலை­ந­க­ரில் வசிக்­கும் மக்­கள், பொது­மு­டக்­கம் அம­லில் இருப்­ப­து­போல வீட்­டில் முடங்­கிக் கிடக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே காற்று மாசு­ப­டு­வதை குறைக்­கும் வகை­யில் பொதுப் போக்­கு­வ­ரத்தை அதிக அள­வில் பயன் ­ப­டுத்த வேண்­டும் என்­றும் சைக்­கிளை அதி­கம் பயன் ­ப­டுத்த வேண்­டும் என்­றும் டெல்லி அரசு கேட்­டுக் கொண்­டுள்­ளது.