'மன்னர் ஆட்சியே மேல்'

'மன்னர் ஆட்சியே மேல்'

1 mins read
d5ace707-213c-4282-a095-a7c12aab99bf
-

ஜம்மு: தற்­போ­தைய அர­சாங்­கத்­தை­விட மன்­ன­ராட்சி மேலா­ன­தாக இருந்­த­தா­கப் பல்­லாண்­டு­கள் கழித்து இன்று ஜம்மு-காஷ்மீா் மக்­கள் கரு­து­கின்­றனா் என்று காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான குலாம் நபி ஆசாத் கூறி­யுள்­ளார்.

ஜம்­மு­வில் அவர் செய்­தி­யா­ளர் ­க­ளுக்குப் பேட்டியளித்தார்.

"ஜம்மு-காஷ்­மீ­ரில் தலை­மைச் செய­ல­கம், அரசு அலு­வ­ல­கங்­கள் கோடை காலத்­தின் 6 மாதங்­கள் ஸ்ரீந­க­ரி­லும், எஞ்­சிய மாதங்­கள் ஜம்­மு­வி­லும் நடை­பெ­றும். இந்த நடை­முறை 1872ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்­மீரை ஆண்ட மன்னா் குலாப் சிங்­கால் தொடங்­கப்­பட்­டது. இந்த அர­சவை மாற்ற நடை­ முறையை நான் எப்­போ­தும் ஆத­ரித்து வந்­துள்­ளேன். ஆனால் இந்த நடை­மு­றைக்கு ஜம்மு-காஷ்­மீ­ரின் தற்­போ­தைய துணை­நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கடந்த ஜூன் 20ஆம் தேதி முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளார்.

"இந்த நடை­முறை மட்­டு­மின்றி இங்­குள்ள நிலம் மற்­றும் வேலை­வாய்ப்­பு­கள் உள்ளூா் மக்­க­ளுக்­குத்­தான் சொந்­தம் என்­பதை ஜம்மு-காஷ்­மீரை ஆண்ட மற்­றொரு மன்னா் ஹரி சிங் உறுதி செய்து இருந்தார்.

"மன்­னா்­களை சா்வாதி­கா­ரி­கள் என்­ற­ழைப்­பது வழக்­கம். ஆனால் தற்­போ­தைய அர­சை­விட மன்­ன­ராட்சி மேலா­ன­தாக இருந்­த­தா­கப் பல்­லாண்­டு­கள் கழித்து இன்று ஜம்மு-காஷ்மீா் மக்­கள் கரு­து­கின்றனா்.

"ஜம்மு-காஷ்­மீ­ரின் ஒட்­டு­மொத்த சூழல் தற்­போது மிக மோச­மாக உள்­ளது. இங்­குள்ள மக்­கள் வறு­மையை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருக்­கின்­றனா்," என்று திரு குலாம் நபி ஆசாத் கூறி­யுள்­ளார்.