பாகிஸ்தான் சிறையிலிருந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு

1 mins read
582be757-8af6-4a3f-b88a-6a085f00965e
உளவு பார்த்ததாகக் கூறி குல்தீப் சிங் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: பாகிஸ்­தான் சிறை­யில் 29 ஆண்­டு­கள் அடைக்­கப்­பட்ட குல்­தீப் சிங் என்­ப­வர் இந்­தி­யா­வின் காஷ்­மீர் மாநி­லத்­துக்­குத் திரும்பி உள்­ளார். அவ­ருக்கு உற்­சா­க­மான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

ஜம்மு காஷ்­மீ­ரின் கதுவா மாவட்­டத்­தில் உள்ள மக்­வால் கிராமத்தைச் சேர்ந்­த­வர் குல்­தீப் சிங்.

பாகிஸ்­தா­னில் வேலை பார்த்து வந்­த­போது உளவு பார்த்­த­தாக 1992ல் கைது செய்­யப்­பட்­டார்.

அதன் பிறகு அவ­ருக்கு என்ன ஆனது என்­பது குறித்து தக­வல் இல்லை. அவ­ரது குடும்­பத்­தி­னர் தவி­யாய்த் தவித்­து ­வந்த நிலை­யில் சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு அவர் லாகூர் சிறை­யில் இருப்­பது தெரிய வந்­தது.

அப்­போது, தனக்கு 25 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குல்­தீப் சிங் தனது குடும்­பத்­தி­ன­ருக்கு எழுதிய கடிதத் தில் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக குல்­தீப் சிங்­கி­டம் இருந்து தக­வல் இல்லை. இத­னால் சிறை­யில் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் என்று அவ­ரது குடும்­பத்­தி­னர் அச்சமடைந்தனர்.

இந்த நிலை­யில் 29 ஆண்­டு­ க­ளுக்­குப் பிறகு 53வது வய­தில் குல்­தீப் சிங் அண்­மை­யில் சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

இதை­ய­டுத்து அவர் கடந்த வெள்­ளிக்கிழமை தனது சொந்த ஊருக்­குத் திரும்­பி­னார். அங்கு பட்­டா­சு­கள் வெடித்து, மலர்­க­ளைத் தூவி உள்­ளூர் மக்­கள் அவரை ஆர­வா­ரத்­து­டன் வர­வேற்­ற­னர்.