நரேந்திர சிங்: வேளாண் சட்டங்கள் பற்றி பேசவில்லை

நரேந்திர சிங்: வேளாண் சட்டங்கள் பற்றி பேசவில்லை

1 mins read
c1a30712-f321-45fe-baee-9e82a3ec5af8
-

புதுடெல்லி: மத்திய அரசு மீண்டும் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வரும் என தாம் ஒருபோதும் கூறவில்லை என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

சில காரணங்களுக்காக அச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்றார்.

அண்மையில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற வகையில் மத்திய அரசு ஓரடி பின்வாங்கி உள்ளது என்றும் இந்த விவகாரத்தில் அரசு மீண்டும் முன்னேறிச் செல்லும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு மூன்று கறுப்புச் சட்டங்களையும் மத்திய அரசு மீண்டும் கொண்டு வரும் என்பது மத்திய அமைச்சரின் பேச்சின் மூலம் உறுதியாகி உள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.

திரும்பப் பெறப்பட்ட சட்டங்களை வேறு வடிவில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. தாம் அவ்வாறு பேசவில்லை என அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.