மாவட்ட அளவில் கட்டுப்பாடுகள்: மத்திய அரசு அறிவுறுத்து

புது­டெல்லி: தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் தேவைப்­பட்­டால் மாவட்ட அள­வில் கட்டுப்­பா­டு­க­ளைக் கொண்­டு­வ­ர­லாம் என்று மாநி­லங்­க­ளுக்­கும் யூனியன் பிர­தே­சங்­க­ளுக்­கும் மத்­திய உள்­துறை அமைச்சு அறி­வு­றுத்தி உள்­ளது.

புத்­தாண்டு, பொங்­கல், மகர சங்­க­ராந்தி என பண்­டிகை, விடுமுறை நாள்­கள் வரு­வ­தால், பொது­மக்­கள் அதி­க­மா­கக் கூடும் வாய்ப்பு இருக்­கிறது.

இத­னால் தொற்­றுப் பர­வல் அதி­க­ரிக்­க­லாம் என்­ப­தால் மாநிலங்­களே கட்­டுப்­பா­டு­கள் விதிப்­பது குறித்து முடிவு எடுக்­க­லாம் என உள்­துறை அமைச்சு கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 578ஆக அதி­க­ரித்­துள்­ளது. இதை­யடுத்து டெல்­லி­யி­லும் நேற்று முதல் இரவு நேர ஊர­டங்கு அம­லுக்கு வந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் நாடு முழு­வ­தும் புதி­தாக 156 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

நாட்­டி­லேயே ஆக அதி­க­மாக டெல்­லி­யில் 142 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மகாராஷ்­டி­ரா­வில் இது­வரை 141 பேருக்­கும் கேர­ளா­வில் 57 பேருக்­கும் ஓமிக்­ரான் பாதிப்பு உள்­ளது.

இதை­ய­டுத்து, உத்­த­ரப் பிர­தே­சம், குஜ­ராத், மத்­தி­யப் பிர­தேசம், ஹரியானா, அசாம் மாநி­லங்­கள் ஏற்­கெ­னவே இரவு நேர ஊர­டங்கை அமல்­ப­டுத்­தி­யுள்­ளன. கர்­நா­ட­கா­வில் இன்று முதல் அடுத்த பத்து நாள்­க­ளுக்கு இரவு நேர ஊட­ரங்கு அம­லில் இருக்­கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்­நி­லை­யில், பாதிப்பு அதி­க­ரிப்­பதை அடுத்து டெல்லி அர­சும் நேற்று முதல் இரவு நேர ஊர­டங்கை அமல்­ப­டுத்தி உள்­ளது.

ஆங்­கி­லப் புத்­தாண்­டை­யொட்டி விருந்து, கொண்­டாட்ட நிகழ்­வு­கள் அதிக அள­வில் நடை­பெறும் வாய்ப்புள்­ள­தால் அவற்­றின் மூலம் தொற்­றுப்­ப­ர­வல் அதி­க­ரிக்­கக்­கூடும் என நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து பல மாநி­லங்­கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இரவு நேர ஊர­டங்கை அமல்­படுத்தி உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!