ஹைதராபாத்: தெலுங்கானா ஆயுதப்படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலியாகி விட்டனர். அவர்களில் நால்வர் பெண்கள் ஆவர். காவல்துறை தரப்பில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏராளமான வெடி பொருள்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

