கவனிக்கப்படாத புகார்கள்; தனது ஊதியத்தை நிறுத்திய ஆட்சியர்

கவனிக்கப்படாத புகார்கள்; தனது ஊதியத்தை நிறுத்திய ஆட்சியர்

1 mins read
0d83e2e2-4f58-4fc3-ac05-383bf03f5ee4
-

போபால்: மத்­தி­யப்­ பி­ர­தேச மாநி­லத்­தில் மக்­கள் கொடுத்த புகார்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­காத அரசு அதி­கா­ரி­க­ளின் ஊதி­யத்­து­டன், தனது ஊதி­யத்­தை­யும் தர­வேண்டாம் என்று நிறுத்­தி­வைத்­துள்­ளார் ஜபல்­பூர் மாவட்ட ஆட்­சியர் கரம்­வீர் சர்மா (படம்).

கடந்த திங்­கள்­கி­ழமை முதல்­வ­ரின் 'ஹெல்ப்­லை­னில்' நிலு­வை­யில் உள்ள புகார்­கள் குறித்து துறை வாரி­யாக கரம்­வீர் சர்மா ஆய்வு செய்­தார். இதில் ஏரா­ள­மான புகார்­களுக்குத் தீர்வு காண்­ப­தில் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இத­னால் கடும் கோபத்­துக்கு ஆளான அவர், டிசம்­பர் மாதத்­திற்­கான தனது ஊதி­யத்­து­டன் மற்­றும் சில உய­ர­தி­கா­ரி­க­ளின் ஊதி­யத்­தை­யும் நிறுத்தி வைக்க உத்­த­ர­விட்­டுள்­ளார்.

100 நாள்­க­ளுக்கு மேல் நிலு­வை­யில் உள்ள புகார்­க­ளுக்கு எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­காத நிலை­யி­லேயே இந்த உத்­த­ர­வு பிறப்­பிக்­கப்­ப­டு­வ­தாக ஆட்­சி­யர் கூறி­யுள்­ளார்.

நக­ரங்­களில் தூய்மை தொடர்­பாக அலட்­சி­யம் காட்­டி­ய­தற்­காக துணை நக­ராட்சி ஆணை­யர்­க­ளுக்­கும் வரு­வாய்த்­துறை வழக்­கு­களில் அலட்­சி­யம் காட்­டி­ய­தற்­காக சில தாசில்­தார்­க­ளுக்­கும், பல்­வேறு வழக்­கு­களைக் கையாள்­வ­தில் மெத்­த­ன­மாக செயல்­பட்­ட­தற்­காக செயல் பொறி­யா­ளர் பிஐயு (திட்ட அம­லாக்­கப் பிரிவு) ஆகி­யோ­ரின் அக­வி­லைப்­ப­டியை நிறுத்தி வைக்கு­மா­றும் ஆட்­சி­யர்­ அ­றி­வு­றுத்­தி­யுள்­ளார்.

அனைத்­துப் புகார்­க­ளை­யும் தீர்வு காண டிசம்­பர் 31 வரை காலக்­கெ­டுவை நிர்­ண­யித்­துள்ள ஆட்­சி­யர் கரம்­வீர் சர்மா தவ­றி­னால் மேலும் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

இவ­ரது நட­வ­டிக்­கைக்கு மக்­கள் மத்­தி­யி­லும் சமூக வலைத்­த­ளங்­களி­லும் பெரும் பாராட்­டு­கள் குவிந்­துள்­ளன.