தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறிகள் நேரடி கொள்முதல்

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறிகள் நேரடி கொள்முதல்

1 mins read
51f99209-6cd5-4c8f-a1fe-3fd9f337f4d9
-

கம்­பம்: தமி­ழ­கத்­தில் இருந்து காய்­க­றி­களை நேர­டி­யாக கொள்­மு­தல் செய்ய கேரள அர­சின் வேளாண் துறை 'கார்டி கிராப்' என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து காய்­கறி, பல­ச­ரக்கு, பால், கால்­நடைத் தீவ­னங்­கள் உள்­ளிட்ட பொருள்­களை கேரளா பெரு­ம­ள­வில் வாங்­கு­கிறது.

ஒட்­டன்­சத்­தி­ரம், கம்­பம், தேனி, தென்­காசி பகு­தி­களில் இருந்து தின­மும் 100 டன் வரை காய்­கறி கேரளா செல்­கிறது. இந்­தக் காய்­கறி விற்­ப­னை­யில் பல இடைத்­த­ர­கர்­கள் உள்­ள­னர். இத­னால் கேர­ளத்­தில் விலை பல மடங்கு உயர்ந்­தது.

இதைத் தடுக்க கேரள வேளாண்­துறை கார்டி கிராப் என்ற அமைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது.

இந்த அமைப்பு தமி­ழக பெரிய சந்­தை­களில் இருந்து காய்­க­றியை நேரடி கொள்­மு­தல் செய்து கேர­ளா­வில் நியா­ய­மான விலை­யில் விற்கத் துவங்­கி­யது. இது இடைத்­த­ர­கர்­க­ளுக்கு கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­னால் செயற்கை தட்­டுப்­பாட்டை உரு­வாக்கி விலை­களை உயர்த்த முயற்சி செய்­கின்றனர்.

தமி­ழ­கத்­தில் கிலோ ரூ.40க்கு விற்­கும் கொத்­த­மல்லித் தழை அங்கு ரூ.140, கத்­தரிக்காய் ரூ. 110 என இடைத்­த­ர­கர்­கள் மூலம் விற்­கப்­ப­டு­கிறது.

இத­னால் தங்­கள் கொள்­மு­தல், விற்­ப­னையை அதி­க­ரிக்க கேரள அதி­கா­ரி­கள் தீவி­ரம்­காட்டி வரு­கின்­ற­னர்.