இந்திய விமானங்கள், விமான நிலையங்களில் இந்திய இசை

இந்திய விமானங்கள், விமான நிலையங்களில் இந்திய இசை

1 mins read
87be7ee7-296b-44a3-9699-96e1fa75081c
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இயக்­கப்­படும் விமா­னங்­க­ளி­லும், விமான நிலை­யங்­க­ளி­லும் இனி இந்­திய இசையை ரசிக்­க­லாம். இந்­திய கலாசார ஆய்­வுக் குழு­வின் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்­டுள்ள இந்­திய சிவில் விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சு "இந்­தி­யா­வின் இசை இந்­திய மக்­க­ளின் சமூக, மத வாழ்­வின் ஓர் அங்­க­மா­கச் செயல்­ப­டு­கிறது" என்று குறிப்­பிட்­டுள்­ளது.

உல­கம் முழு­வ­தும் செயல்­பட்டு வரும் விமான சேவை­கள், தத்­தம் நாடு­க­ளின் இசை­யையே தங்­க­ளின் விமா­னங்­களில் இசைக்­கின்­ற­னர். அமெ­ரிக்க விமா­னங்­களில் ஜாஸூம், ஆஸ்­தி­ரிய விமா­னங்­களில் மொசார்ட்­டும், மத்­திய கிழக்­கா­சிய நாடு­க­ளின் விமான சேவை­களில் அரபி இசை­யும் இசைக்­கப்­ப­டு­கிறது. ஆனால் இந்­திய விமான சேவை­களில் எப்­போ­தா­வது மட்­டுமே இந்­திய இசை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. நம்­மு­டைய இசை உயர்ந்த பண்­பாடு மற்­றும் கலாசா­ரத்தைக் கொண்­டுள்­ளது. இதனை நினைத்து இந்­தி­யர்­கள் பெரு­மைப்­பட வேண்­டும் என்று சிவில் விமானப் போக்­கு­வ­ரத்­தின் கூடு­தல் செய­லா­ளர் உஷா பாதீ, விமான சேவை­கள் மற்­றும் விமான நிலை­யங்­க­ளுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.