காலணிக்கு வரி 12% ஆகிறது
பொருள் சேவை வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஜனவரி 1 முதல் நடப்புக்கு வருகிறது. அதன்படி பருத்தித் துணி தவிர்த்த அனைத்து வகை துணிமணிகள், காலணிகளுக்கான வரி 5 விழுக்காட்டிலிருந்து 12% ஆக உயர்கிறது. 'ஓலா, ஊபர்' போன்ற கைப்பேசிச் செயலிகள் வழி பதிவுசெய்யப்படும் ஆட்டோ பயணத்துக்கு இனி 5% வரி செலுத்த வேண்டும்.
பாஜக வந்தால் ரூ.50க்கு மது
வரும் 2024 ஆந்திரா சட்ட மன்றத் தேர்தலில் பாஜக வென்றால் ரூ50.க்கு ஒரு பாட்டில் மது கிடக்கும் என்று அம்மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு கூறியுள்ளார். "ரூ.75க்கு மது விற்போம். வரு மானம் வந்தால் ஒரு பாட்டில் ரூ.50க்கு கூட கொடுப்போம்," என்ற அவர், ஆந்திராவில் ஒரு கோடி பேர் குடிப்பதாக வும், ஒருவர் சராசரியாக மாதத்துக்கு ரூ.12,000 செலவு செய்வதாகவும் சொன்னார்.
ஒன்பது விழுக்காடு வளர்ச்சி
2021-22 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். நாட்டின் பொருளியல் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டிலும் அடுத்த நிதியாண்டிலும் 9% ஆக இருக்கும் என்று உள்நாட்டுத் தர நிர்ணய நிறுவனமான 'இக்ரா' அறிவித்துள்ளது.
காளையால் இறந்தால் ரூ.5 ல.
உ.பி.யில் காளை மாடு முட்டி இறந்தால் ரூ.5 லட்சம் இழப் பீடு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
லுாதியானா குண்டுவெடிப்பு ஜெர்மனியில் ஒருவர் கைது
பஞ்சாப், லுாதியானா நீதிமன்றத் தில் அண்மையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சீக்கியர் ஒருவர் ஜெர்மனியில் கைதாகி யுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானார், ஐவர் காயமடைந்தனர். விசாரணை யில், 'நீதிக்கான சீக்கியர்' அமைப்பு பின்னணியில் இருப்பது உறுதியானது.

