நாளிதழ் 'பிடிஎஃப்'களை பகிர்வோர் மீது நடவடிக்கை

நாளிதழ் 'பிடிஎஃப்'களை பகிர்வோர் மீது நடவடிக்கை

1 mins read
e09c1994-f79d-4d38-a5c0-35769682ddc3
-

புதுடெல்லி: செய்­தித்­தாள் நிறு­வ­னங்­க­ளின் அனு­ம­தி­யின்றி மின்­னி­தழ்­கள், பிடி­எஃப்.,களை சட்­ட­வி­ரோ­த­மாக பரப்­பும் வாட்ஸ்­அப் குழுக்­களை முடக்க டெல்லி உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

பதிப்­பு­ரி­மைச் சட்­டம், வர்த்­தக முத்­தி­ரை­கள் சட்­டம் ஆகி­ய­வற்­றின்படி, தனி­ந­பர்­கள் மின்­னி­தழ்­களை அல்­லது தனி­யா­ருக்­குச் சொந்­த­மான வெளி­யீட்­டின் எந்­தப் பக்­கத்­தை­யும் பகி­ரக்­கூ­டாது.

அதன்­படி, சமூக வலை­த­ளக் குழுக்­களில் செய்­தித்­தாள்­களை பகிர்­வதை எதிர்த்து பல செய்­தித்­தாள் அமைப்­பு­களும் நீதி­மன்­றத்தை அணு­கி­யுள்­ளன.

இந்தி மொழியில் வெளி­யா­கும் டெய்­னிக் பாஸ்­கர் என்­னும் செய்­தித்­தாள் நிறு­வ­னம் டெல்லி உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­துள்­ளது. அதில் தங்­க­ளது செய்­தித்­தா­ளின் மின்­னி­தழை வாட்ஸ்­அப் குழுக்­களில் பகிர்­வ­தாக குறிப்­பிட்டு, 85 குழுக்­க­ளின் பெயர்­க­ளை­யும் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்த வழக்கை விசா­ரித்த டெல்லி உயர்­நீ­தி­மன்­றம், மின்­னி­தழ்­களை அனு­ம­தி­யின்றி சட்­ட­விரோ­த­மாக பரப்­பும் வாட்ஸ்­ஆப் குழுக்­களை நீக்க அல்­லது முடக்க வேண்­டும் என வாட்ஸ்­அப் நிறு­வ­னத்­திற்கு உத்­த­ர­விட்­டுள்­ளது. இந்த வழக்கு அடுத்­தாண்டு மே 2ம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.