சாமியார் கைது; மத்தியப்பிரதேச அரசு ஆட்சேபம்

சாமியார் கைது; மத்தியப்பிரதேச அரசு ஆட்சேபம்

2 mins read
a01eff4d-bb96-4b6f-9238-a45f12c76b28
காளிசரண் மகாராஜ். கோப்புப்படம்: இந்திய ஊடகம் -

ராய்ப்­பூர்: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தைச் ேசர்ந்த பிர­பல சாமி­யார் காளி­ச­ரண் மகா­ராஜ், சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இத­னால் பாஜக ஆளும் மகா­ராஷ்­டிரா மாநில அரசு கடும் அதி­ருப்தி தெரி­வித்­துள்­ளது.

சத்­தீஸ்­கர் மாநி­லம் ராய்ப் ­பூ­ரில் நடை­பெற்ற ஆன்­மிக மாநாட்­டில் மகாத்மா காந்தி குறித்து தவ­றான வார்த்­தையைப் பயன்­ப­டுத்­தி­னார். மேலும் மகாத்­மாவைச் சுட்­டுக்­கொன்ற கோட்­சேவை வணங்­கு­கி­றேன் என்று அவர் பாராட்­டிப் பேசி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவ­ரது பேச்சு கடும் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்ள வேளை­யில் இது தொடர்­பாக காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் புகார் அளித்­த­தால் அவர் மீது ராய்ப்­பூர் காவல்­துறை வழக்­குப் பதிவு செய்­துள்­ளது.

மத்­தி­யப்­பி­ர­தேச மாநி­லம் கஜு­ராஹோ பகு­தி­யில் பதுங்­கி ­யிருந்த காளி­ச­ரண் மகா­ராஜை, சத்­தீஸ்­கர் காவல்­து­றை­யின் பத்து பேர் கொண்ட காவல்­துறைக்குழு, தீவிர தேடு­தல் வேட்­டைக்­குப் பின் கைது செய்துள்­ள­து.

இந்த நிலை­யில் "மத்­தி­ய­ப்பி­ர­தேச மாநில காவல்­து­றை­யி­டம் உரிய தக­வல் தெரி­விக்­கா­மல் சத்­தீஸ்­கர் மாநி­லத்­தில் ஆளுங்­கட்­சி­யான காங்­கி­ரஸ், காளி­ச­ரணைக் கைது செய்­துள்­ளது. இதன்­மூ­லம் இரு மாநி­லங்­க­ளுக்கு இடையிலான நெறி­மு­றை­களை அது மீறி­யுள்­ளது," என்று மத்­தி­ய­பி­ர­தேச மாநில ஆளும் பாஜக அரசு தெரி­வித்­துள்­ளது.

இதற்குப் பதி­ல­ளித்த சத்­தீஸ்­கர் மாநில முதல்­வர் பூபேஷ் பாகேல், "காளி­ச­ரண் மகா­ராஜை கைது செய்­தது குறித்து சத்­தீஸ்­கர் போலி­சார் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்­கும் வழக்­க­றி­ஞ­ருக்­கும் தக­வல் அளித்­துள்­ள­னர். மேலும், 24 மணி நேரத்­திற்­குள் அவர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்," என்­றார்.

மகாத்மா காந்­தியை இழி­வு ­படுத்­தி­ய­வர் கைது செய்­யப்­பட்­ட­தில், மத்­தியப்பிர­தேச உள்­துறை அமைச்­ச­ரும் பாஜக தலை­வ­ரு­மான நரோத்­தம் மிஸ்­ரா­வுக்கு மகிழ்ச்­சியா அல்­லது வருத்­தமா? என்­றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.