கான்பூர்: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஒரு வாரமாக நடந்த வருமான வரி சோதனை புதன்கிழமை அன்று நிறைவுக்கு வந்தது. கட்டுக் கட்டாக பதுக்கிவைக்கப்பட்ட பணத்தை அதிகாரிகள் எண்ணி முடிப்பதற்கே இத்தனை நாட்கள் தேவைப்பட்டது.
இந்தச் சோதனையில் மொத்தமாக ரூ.196 கோடி ரொக்கமும் ரூ.11 கோடி மதிப்புள்ள 23 கிலோ தங்கமும் ரூ.6 கோடி மதிப்புள்ள 600 கிலோ சந்தன எண்ணெய்யும் வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாசனைத் திரவியம் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த பியூஷ் ஜெயின், ஐக்கிய அரபு சிற்றரசுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாசனைத் திரவியம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை முறைகேடாக அனுப்பியதாக புகார் எழுந்தது. ேமலும் ஜிஎஸ்டி வரியை அவர் முறையாக கட்டவில்லை என்றும் புகார் எழுந்தது. இந்த நிலையில் இம்மாதம் 22ஆம் தேதி கான்பூரில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சோதனை புதனன்று கன்னோஜ் மாவட்டத்தில் நிறைவு பெற்றது. அங்கு சிக்கிய தங்கக் கட்டிகளைப் பரிசோதித்தபோது அவற்றில் வெளிநாட்டு முத்திரை இருப்பது கண்டறியப்பட்டதாக 'பிடிஐ'யை மேற்கோள்காட்டி 'த இந்து திசை' செய்தி வெளியிட்டிருந்தது.
பியூஷ் ஜெயின் வெளிநாடுகளு டனான வர்த்தகத்தில் பெரும் பாலும் பணத்திற்குப் பதிலாக தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளார் என்று தெரிகிறது. ஆனால் வரி கட்டாமல் எப்படி தங்கக் கட்டிகளை அவர் இந்தியாவுக்குள் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு நிலவரத் தில் திருப்பதி திம்பத்தில் பணி யாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒரு வரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்பு உள்ள வைரங்கள் கிடைத்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவிய தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

