அமராவதி: ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஏழுமலையானைத் தரிசிக்க நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருவதால் கிருமிப் பரவலைக் கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் விதிமுறைகளை அடிக்கடி மாற்றி வரு கிறது.
தற்போது ஓமிக்ரான் கிருமி புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்ப தால் பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி அன்று திரு மலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெறுகிறது.
இதனால் ஜனவரி 13 முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 13ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருப்பாவை பாமாலை, அர்ச்சனை, நெய்வேத்தியம் சமர்ப்பித்து பூஜைகள் நடைபெறும்.
இரண்டு மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
காலை 9 மணி முதல் ரூ.300 சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு, இலவச தரிசனம், கல்யாண உற் சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை நுழைவுச்சீட்டுகளை இணையம் வழியாகப் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாராயணவனம், நாகலாபுரம், கார்வேட்டி நகரம், நகரி உள்ளிட்ட கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாயில் திறக்கப்பட உள்ளது. இதை காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே திருப்பதி தேவஸ்தான கோயில்களில் கிருமிப் பரவலுக்கு இடம்கொடுக்காத வகையில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பக்தர்கள் கொவிட்-19 தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கோயில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இதற்காக அனைத்து கோயில் களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.
அவர்கள் பக்தர்களின் தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப் படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

