புதுடெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 31,000 பதிவாகியிருப்பதாகவும் 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பார்த்திராத எண்ணிக்கை இது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் 2021ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 31,000 பதிவாகியுள்ளன. இவற்றில், பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
31,000த்தில் 11,013 வழக்குகள் பெண்களுக்கு உணர்வுபூர்வமாக பாதிப்பை ஏற்படுத்துதல் போன்றவை. வீட்டில் நடக்கும் வன்முறை தொடர்பாக 6,633 வழக்குகளும் வரதட்சணைக் கொடுமை நிகழ்ந்ததாக 4,589 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15,828 ஆகப் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து டெல்லியில் 3,336 ஆகவும் மகாராஷ்டிரத்தில் 1,504, ஹரியானாவில் 1,460 மற்றும் பீகாரில் 1,456 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் 30 விழுக்காடு அதிகரித்தன. 2020 முழுவதும் 23,722 புகார்கள் பதிவாயின.
குறிப்பாக, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டதை ஆணையத்தின் அறிக்கை உணர்த்துகிறது. 2014ல் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 33,906.
தங்களுக்கு எதிரான கொடுமை குறித்து துணிச்சலுடன் புகார் தெரிவிக்கும் பெண்கள் அதிகரித்திருப்பதும் புகார்களைத் தெரிவிக்க பல்வேறு தளங்கள் இருப்பதும் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
டெல்லியில் இளம்பெண்ணை
சீரழித்த மூவர்
டெல்லி நகரின் புத்த விகார் பகுதியில் 21 வயதுப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிற்சாலை அதிபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர். வியாழக்கிழமை மாலை உடற்பயிற்சிக்கூடம் ஒன்றி னுள் மூன்று மணி நேரம் தம்மை சீரழித்ததாக அப்பெண் தமது கணவ ரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் செய்யப் பட்டது.
பாதிக்கு மேற்பட்ட புகார்கள் உத்தரப் பிரதேசத்தில் பதிவானவை

