பிரதமரின் கார் அணிவகுப்பை தடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

பஞ்சாப் அரசுக்கு உள்துறை கண்டனம்; 'உயிருடன் திரும்புகிறேன்' என்றார் மோடி

புது­டெல்லி: பாது­காப்பு விதி­மீ­றல் கார­ண­மாக பஞ்­சாப் மாநி­லத்­தில் பிர­த­மர் மோடி பங்­கேற்க இருந்த நிகழ்ச்சி­கள் ரத்­தா­கின. இது தொடர்­பாக அம்­மா­நில அர­சுக்கு மத்­திய உள்­துறை அமைச்சு கண்டனம் தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் பஞ்­சாப் மாநிலத்­தில் உள்ள ஹுசை­னி­வாலா பகு­தி­யில், தியா­கி­கள் நினை­விடத்­தில் நடை­பெ­றும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க திட்­ட­மிட்­டி­ருந்­தார் மோடி. இதற்­காக அவர் பதிண்டா விமான நிலை­யத்­தைச் சென்­ற­டைந்­தார்.

அப்­போது வானிலை சீராக இல்­லா­ததை அடுத்து, சாலை வழி­யாக அவர் ஹுசை­னி­வாலா பகு­திக்­குச் செல்­வது என முடி­வானது. அதன்படி பிர­த­ம­ரின் வாகன அணி­வ­குப்பு அங்கு கிளம்­பி­யது.

ஆனால், ஹுசை­னி­வா­லா­வில் உள்ள தேசிய தியா­கி­கள் நினை­வி­டத்­தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்­ட­ருக்கு முன்­னால் பிர­த­ம­ரின் வாகன அணி­வ­குப்பு மேம்­பா­லம் ஒன்றை அடைந்­த­போது, அந்த மேம்­பா­லத்­தில் போராட்­டக்­கா­ரர்­கள் சிலர் சாலையை மறித்து அமர்ந்­தி­ருந்­த­னர்.

இத­னால் பிர­த­ம­ரின் பாது­காப்பு அதி­கா­ரி­கள் கடும் அதிர்ச்­சிக்கு ஆளா­கி­னர். பிர­த­ம­ரின் பாது­காப்பு அணி­வ­குப்­பில் இடம்பெற்றிருந்த வாக­னங்­கள் அனைத்­தும் பாலத்தில் நிறுத்­தப்­பட்­ட­ன.

ஏறத்­தாழ இரு­பது நிமி­டங்களுக்கு பிர­த­மர் தனது காருக்கு உள்­ளேயே காக்க வைக்­கப்­பட்­டார். பாது­காப்பு ஏற்­பா­டு­களில் இப்­ப­டியொரு குறை­பாடு எவ்­வாறு ஏற்­பட்­டது எனும் கேள்வி எழுந்­துள்­ளது.

போராட்­டத்தை அடுத்து, பிரத­ம­ரின் கார் மீண்­டும் பதிண்டா விமான நிலை­யத்­தைச் சென்­ற­டைந்­தது. அங்­குள்ள அதி­கா­ரி­க­ளி­டம், "நான் உயி­ரு­டன் திரும்­பி­விட்­டதாக உங்கள் முதல்­வ­ரி­டம் தெரிவி­யுங்­கள்," என்று பிர­த­மர் மோடி குறிப்­பிட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பிர­த­ம­ரின் பய­ணத் திட்­டம் குறித்து பஞ்­சாப் அர­சுக்கு முன்­கூட்­டியே தக­வல் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது என்­றும் அதன்­படி அம்­மா­நில அரசு விதி­மு­றை­க­ளின்­படி அவ­சர காலத்­திற்­கான திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த உரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்­தி­ருக்க வேண்­டும் என்­றும் மத்­திய உள்­துறை அமைச்சு கூறி­யது.

ஒரு மேம்­பா­லத்­தின் மீது நாட்டின் பிர­த­மரை இரு­பது நிமிடங்­கள் காத்­தி­ருக்க வைப்­பது, பாது­காப்பு ஏற்­பாடு­களில் மிகப்­பெ­ரிய குறை­பா­டு­கள் இருப்­ப­தைக் காட்டு­கிறது என்­றும் அந்த அமைச்சு கூறி­யுள்­ளது. இது தொடர்­பாக பஞ்­சாப் அர­சி­டம் இருந்து விரி­வான விசா­ரணை அறிக்­கை­யை­யும் கோரி­யுள்­ளது.

இதற்­கி­டையே, இந்த விவ­கா­ரம் இப்­போது உச்ச நீதி­மன்­றத்­தை­யும் எட்­டி­யுள்­ளது.

இது தொடர்­பாக பஞ்­சாப் மாநில மூத்த வழக்­க­றி­ஞ­ரான மணிந்­தர் சிங், நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள மனு­வில், "பஞ்சாப் அர­சால் நிகழ்ந்த பாது­காப்பு குளறு­படி குறித்து முழு­மை­யான விசா­ரணை தேவை. இதுபோல் மீண்­டும் நிகழா­மல் இருப்­பதை உறுதி செய்ய வேண்டும்," எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, பஞ்­சாப் மாநி­லத்­தில் பிர­த­மர் பங்­கேற்­கும் நிகழ்ச்­சி­களைத் தடுப்­ப­தற்­கான அனைத்து தந்­தி­ரங்­க­ளை­யும் காங்­கி­ரஸ் மேற்­கொள்­வதாக பாஜக தேசி­யத் தலை­வர் ஜே.பி.நட்டா சாடி உள்­ளார்.

மக்­கள் தங்­களை நிரா­க­ரித்­து­விட்­ட­தால் காங்­கி­ர­சார் விரக்­தி­யில் இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடிக்கு உள்ள பாது­காப்பு அர­ணை­யும் மீறி அவ­ருக்கு உடல் ரீதி­யில் தீங்கு விளை­விக்­கு­மாறு பஞ்­சாப் காவல்­துறை வழி­ந­டத்­தப்­பட்­டுள்­ள­தாக மத்திய அமைச்­சர் ஸ்மி­ருதி இரானி சாடி உள்­ளார்.

இத்­த­கைய பர­ப­ரப்­புக்கு மத்­தி­யில், பிர­த­ம­ரைத் தாக்­கும் சூழல் ஏதும் உரு­வா­க­வில்லை என பஞ்­சாப் முதல்­வர் சரண்­ஜித் சிங் கூறி­யுள்­ளார்.

நடந்த சம்­ப­வத்­துக்­காக தாம் வருத்­தம் தெரி­விப்­ப­தா­க­வும் நாட்­டின் பிர­த­மரைக் காக்க தம் உயிரைக் கொடுக்கக்கூட தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழு ஒன்றை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!