தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புறா காலில் காணப்படும் சீன எழுத்துகளால் பரபரப்பு

1 mins read
9ce2e836-024b-452d-9cee-50ea41b895f6
-

அம­ராவதி: நாட்­டின் சில பகு­தி­களில் புறாக்­க­ளின் கால்­களில் கட்­டப்­பட்­டுள்ள சீட்­டு­கள் அல்­லது வேறு சிறிய ரக பொருள்­களில் சீன எழுத்­து­க­ளு­டன் கூடிய ரகசிய குறி­யீ­டு­கள் இருப்­பது தெரி­ய­வந்துள்­ளது. இது­கு­றித்து உளவுத்­துறை தக­வல்­க­ளைத் திரட்டி வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் ஆந்­தி­ரா­வின் ஓங்­கோல் பகு­தி­யில் உள்ள அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் ஒரு புறா தஞ்­ச­ம­டைந்­தது. அங்­குள்­ள­வர்­கள் அதைப் பிடித்­த­போது, அதன் காலில் சீன ரக­சி­யக் குறி­யீடு காணப்­பட்­டது. இது­குறித்து காவல்­து­றைக்கு தக­வல் தெரி­வித்­த­னர்.

அந்­தக் குறி­யீட்­டில் 'ஏஐ­ஆர் 2022' என­வும் சில சீன எழுத்­துக்­களும் காணப்­பட்­டன.

இதே­போல் ஒடிசா மாநி­லத்­தில் உள்ள கிரா­மப் பகு­தி­யில் சாலை­யில் அடி­பட்­டுக் கிடந்த புறாவைப் காப்­பாற்ற முயன்­றுள்­ளார் சர்­பேஷ்­வர் என்ற இளை­யர். அந்­தப் புறா­வின் காலி­லும் சீன எழுத்­துக்­க­ளைக் கொண்ட ரக­சியக் குறி­யீடு காணப்­பட்­டது.

இந்­தப் புறாக்­கள் எங்­கி­ருந்து, யாரால் அனுப்­பப்­பட்­டன என விசா­ரணை நடக்­கிறது.