பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு நகரில் முறைப்படி அனுமதி பெறாமல் வீட்டில் மருந்து தயாரித்த ஆடவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்று 'இந்தியா டுடே' தெரிவித்தது. சென்ற திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்து ஹெசரா காட்டாவுக்கு அருகே தரபானாஹாலியில் உள்ள வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கு நைஜீரியாவின் சிறில் என்பவரை அதிகாரிகள் கைது செய்து மருந்து தயாரிப்புக்குத் தேவையான ரூ.50 லட்சம் மதிப்புள்ள மூலப் பொருட்களைக் கைப்பற்றினர். கடந்த 2019ல் வர்த்தக விசா மூலம் மூத்த சகோதரருடன் சிறில் இந்தியா வந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தரபானாஹாலி கிராமத்தில் குடியேறினார் என்று அதிகாரிகள் கூறினர். சிறிலின் சகோதரர் முக்கிய குற்றவாளி எனக்கருதப்படு கிறது. சகோதரர்கள் இணையம் மூலமாக 'எம்டிஎம்ஏ' படிகங்களை செய்யக் கற்றுக்கொண்ட தாகவும் சமையல் குக்கர் மூலம் மூலப்பொருட்களை கொதிக்கவைத்து அதிலிருந்த வந்த ஆவியைக் குளிர வைத்து படிகங்களை செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
மருந்து தயாரித்தவர் கைது
1 mins read
-

