திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு ொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இதையடுத்து வைகுண்ட வாசல் வழியாக காலை 7 மணிக்கு 'விஐபி' பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர்.
பிறகு காலை, மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார். காலை 9 மணிக்கு சாதாரண பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இம்மாதம் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சொர்க்கவாசல் திறப்பை யொட்டி இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை 10 நாள் களுக்கு ரூ.300 கட்டண தரி சனத்தில் 12,000 பக்தர்கள், இலவச தரிசனத்தில் 10,000 பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் 5,000 பேர் என மொத்தம் 27,000 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

