சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்

சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்

2 mins read
28ffbdfa-d43f-4c9a-af83-bed282da1473
நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சி என்று சாய்னா நேவால் கூறியுள்ளார். படங்கள்: இன்ஸ்டகிராம் -

புது­டெல்லி: அண்­மை­யில் பஞ்­சாப் மாநி­லத்­திற்கு வந்த பிர­த­மர் மோடி, விவ­சாயிகளின் போராட்­டத்­தால் சுமார் 20 நிமி­டங்­களாக பாலத்­திலே காத்­தி­ருக்க நேரிட்­டது. பின்­னர் அவர் பய­ணத்தை ரத்து செய்து டெல்லி திரும்­பி­விட்­டார்.

இத­னைச் சுட்­டிக்­காட்­டி­ யிருந்த பூப்­பந்து வீராங்­க­னை­யும் பாஜக ஆத­ர­வா­ள­ரு­மான சாய்னா நேவால், "எந்­த­வொரு நாட்­டின் பிர­த­ம­ரின் பாது­காப்­பு சம­ர­சம் செய்­யப்­பட்­டால், அந்த நாடு தன்­னைத்­தானே பாது­காப்­பாக இருப்­ப­தாக கூறிக்­கொள்ள முடி­யாது. பஞ்­சாப்­பில் பிர­த­மர் மோடி மீது அரா­ஜ­க­வா­தி­க­ளால் நடத்தப்­பட்ட கோழைத்­த­ன­மான தாக்­கு­தலை வலு­வான வார்த்தை களில் நான் கண்­டிக்­கி­றேன்" என்று தனது டுவிட்­டர் பதி­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.

சாய்­னா­வின் இந்­தப் பதி­வுக்கு நடி­கர் சித்­தார்த், "இற­குப்­பந்து உல­கின் சாம்­பி­யன்... கட­வு­ளுக்கு நன்றி. எங்­க­ளி­டம் இந்­தி­யா­வின் பாது­கா­வ­லர்­கள் உள்­ள­னர்" என்று பதில் கூறி­யி­ருந்­தார்.

இந்­தப் பதிவை ஆபா­ச­மான வார்த்­தை­க­ளால் அவ­ரின் டுவிட் ­ட­ரில் தெரி­வித்­ததை அடுத்து கண்­ட­னங்­கள் எழுந்­தன.

கிரிக்­கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி சிவ­சேனா ராஜ்­ய­சபா எம்.பி. பிரி­யங்கா சதுர்­வேதி, தமிழ் சினி­மா­வின் சின்­மயி, தேசிய மக­ளிர் ஆணைய தலை­வர் ரேகா ஷர்மா போன்ற பலர் நடி­கர் சித்­தார்த்­துக்கு கடும் கண்­ட­னங்களைப் பதிவு செய்­த­னர். இது குறித்து தேசிய மக­ளிர் ஆணை­யம், மகா­ராஷ்­டிரா காவல்­து­றை­யி­டம் புகார் அளித்து உள்­ளது. இந்த நிலை­யில் சித்­தார்த் மன்­னிப்பு கேட்­டுள்­ளார்.

டுவிட்­டர் பக்­கத்­தில் வெளி­யிட்ட மன்­னிப்­புக் கடி­தத்­தில் "சரி­யாக புரிந்துகொள்­ளப்­ப­டாத எனது நகைச்­சு­வைக்கு மன்­னிப்பு கோரு கிறேன். எனது 'டுவிட்' வார்த்தை நகைச்­சு­வை­யா­னது மட்­டுமே, உள் நோக்­கம் கொண்­டதல்ல," என்று தெரி­வித்­துள்­ளார்.

தன்­னு­டைய நாகரி­க­மற்ற நகைச்­சு­வைக்கு மன்­னிப்பு கேட்­ப­தா­க­வும் நடி­கர் சித்­தார்த் விளக்­கம் அளித்­துள்­ளார்.

"ஒரு நகைச்­சுவை யாருக்­கும் புரி­ய­வில்லை என்­றால் அது சிறந்த நகைச்­சுவை அல்ல. தங்­க­ளது டுவிட்­டுக்குப்பதி­லாக நான் பதி விட்ட வார்த்­தை­களை நியா­யப் ­படுத்த முடி­யாது. என்­னு­டைய மன்னிப்பை ஏற்­றுக்கொள்­வீர்­கள் என நினைக்­கி­றேன். எப்­போ­தும் நீங்­கள்­தான் என் சாம்­பி­யன்," என்று தனது கடி­தத்­தில் சித்­தார்த் குறிப்­பிட்டுள்­ளார்.