புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த சம்பவத்தில் எண்பது வயது தந்தையை மகனே கொன்று விட்டார்.
புனேவில் ராஜ்குருநகர் பகுதியைச் ேசர்ந்த 80 வயது சங்கரின் மனைவி பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
மகன் சேகர் வீட்டில் அவர் வசித்து வந்தார். சேகருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். சங்கர் தன்னுடைய பெரும்பான்மையான நேரங்களை செய்தித்தாள் வாசிப்பதிலும் கை பேசியைப் பார்ப்பதிலும் செலவழித்து வந்தார்.
சில மாதங்களாக செய்தித்தாள்களில் வெளியாகும் திருமணத் தகவல்களை அவர் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் சில தகவல் மையங்களில் தனது பெயரை அவர் பதிவு செய்திருப்பதாக சேகரின் மனைவி சேகரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அன்று சேகர் மதிய உணவிற்காக தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது வீட்டில் அவரது தந்தை மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது சேகர், அவரிடம் திருமணத் தகவல் மையத்தில் பெயர் பதிவு செய்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார்.
அதை அவரது தந்தை மறுத்துள்ளார். அப்போது அவரது கைபேசியை வாங்கிப் பார்த்தபோது அவர் திருமணத் தகவல் மையத்தில் பதிவு செய்திருப்பதும் அதற்கான கட்டணம் செலுத்தியிருப்பதும் தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சேகர், அவருடைய 80 வயது தந்தையைக் கத்தியால் கொல்ல முயற்சி செய்துள்ளார்.
பின்பு கல்லைக் கொண்டு பலமாக தலையில் அடித்து தந்தையை அவர் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் தன்னுடைய தந்தையைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி சேகர் சரண் அடைந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.