7 எம்எல்ஏக்கள் விலகல்; உ.பி.யில் பாஜகவுக்கு நெருக்கடி

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் அடுத்த மாதம் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், அங்கு ஆளும் பாஜ­கவைச் சேர்ந்த முக்­கியத் தலை­வர்­களும் மக்­கள் பிர­தி­நி­தி­களும் கட்­சி­யில் இருந்து அடுத்­த­டுத்து விலகி வருகி­றார்­கள்.

இது­வரை இரண்டு மாநில அமைச்­சர்­களும் ஏழு எம்எல்ஏக்களும் பாஜ­க­வில் இருந்து விலகி உள்­ள­னர். இத­னால் அக்­கட்­சித் தலைமை கடும் நெருக்­க­டி­யில் இருப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் எதிர்­வரும் பிப்­ர­வரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்­டங்­க­ளாக சட்­டப்­பே­ரவை தேர்­தல் நடை­பெற உள்­ளது.

இதை­ய­டுத்து அங்கு அர­சி­யல் கட்­சி­கள் தேர்­தல் பிர­சா­ரத்தை தொடங்கி உள்­ளன.

ஆளுங்­கட்­சி­யான பாஜக பலத்து­டன் இருப்­ப­தா­க­வும் முக்­கிய எதிர்க்­கட்­சி­கள் அம்­மா­நி­லத்­தில் பல­வீ­ன­மாக உள்­ள­தா­க­வும் கூறப்­பட்ட நிலை­யில், உத்­த­ரப் பிர­தேச அர­சி­யல் களத்­தில் திடீர் திருப்­பங்­கள் ஏற்­பட்டு வரு­கின்­றன.

முதல்­வர் யோகி­நாத் தலைமையி­லான அமைச்சரவையில் இடம்­பெற்­றி­ருந்த சுவாமி பிர­சாத் மவு­ரியா, திடீ­ரென பாஜக­வில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­த ­து­டன் நிற்­கா­மல், முக்­கிய எதிர்க்­கட்­சி­யான சமாஜ்­வாடி கட்­சி­யில் தம்மை இணைத்­துக் கொண்­டுள்­ளார்.

பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­கள் மத்தி­யில் முக்­கியத் தலை­வ­ராக வலம்­வ­ரும் இவ­ரது வில­கல், பாஜ­க­வுக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தும் என்­கி­றார்­கள் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள்.

இந்­நி­லை­யில், இந்து கட­வுள் குறித்து தவ­றா­கப் பேசி­ய­தாக, சுவாமி பிர­சாத் மவு­ரியா மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு, அவ­ரைக் கைது செய்­வ­தற்­கான பிடி­யா­ணை­யும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

2014ஆம் ஆண்டு பகு­ஜன் சமாஜ் கட்­சி­யில் இருந்­த­போது அவர் இவ்­வாறு பேசி­ய­தா­கக் கூறி இப்­போது கைது செய்ய நட­வ­டிக்கை எடுப்­பது அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என சமாஜ்­வாடி கட்சி கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

இத்­த­கைய பர­ப­ரப்­பான சூழ்­நி­லை­யில், பாஜ­க­வைச் சேர்ந்த மற்­றொரு அமைச்­ச­ரான தாரா சிங் சவு­கா­னும் அக்­கட்­சி­யில் இருந்து விலகி, தம்மை சமாஜ்­வாடி கட்­சி­யில் இணைத்­துக் கொண்­டுள்­ளார்.

ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சி­யில், தலித், பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சிறு­பான்­மை­யி­னர் சமூ­கத்தை சேர்ந்த பிர­தி­நி­தி­களுக்கு எந்த முக்­கி­யத்­து­வ­மும் தரப்­ப­ட­வில்லை என அவர் சாடியுள்­ளார்.

இரு அமைச்­சர்­க­ளைத் தொடர்ந்து அவ­ரது ஆத­ர­வாளர்­க­ளான ஏழு எம்­எல்­ஏக்­களும் பாஜ­க­வில் இருந்து விலகி உள்­ள­னர். உத்­த­ரப் பிர­தேச தேர்­த­லில் பாஜக, சமாஜ்­வாடி, பகு­ஜன் சமாஜ் கட்­சி­கள் இடையே கடும் போட்டி நில­வும் என்று எதிர்­பார்க்­கப்­படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!