ரூ.7,500 கோடி கேட்கும் இலங்கை
புதுடெல்லி: உணவுப் பொருள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை அரசு, நிலைமையைச் சமாளிக்க உடனடிக் கடனாக இந்தியாவிடம் ரூ.7,500 கோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுலாத்துறை முடக்கம் காரணமாக பிற துறைகளும் பாதிக்கப்பட்டதில், இலங்கையின் பொருளியல் மோசமடைந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கடும் உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடும் என விவசாயிகளும் நிபுணர்களும் எச்சரித்துள்ள நிலையில், உணவுப்பொருள் களை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசிடம் போதுமான அந்நியச் செலாவணி இல்லை எனக் கூறப்படுகிறது.
இஸ்ரோவின் புதிய தலைவர்
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கே.சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைவராக உள்ள கே.சிவனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து, கே.சோமநாத்தை அப்பதவியில் அமர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஓமிக்ரான்: அலட்சியம் வேண்டாம்
புதுடெல்லி: ஓமிக்ரான் பாதிப்புக்கான அறிகுறிகளை சாதாரண சளிப்பாதிப்பு என்று கருதி அலட்சியமாக இருக்க வேண்டாம் என நிதி ஆயோக்கின் மருத்துவக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் கூறியுள்ளார். தடுப்பூசி போட்டால் மட்டுமே தொற்றுப்பரவல் வேகம் குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

