சண்டிகர்: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த இரு சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சந்தித்தனர்.
இருவரில் அண்ணன் முகமது ஹபீப் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் தம்பி முகமது சித்திக் பாகிஸ்தானில் உள்ள ஃபைஸ்லாபாத்திலும் வசித்து வந்தனர்.
நாடுகள் பிரிந்ததால் இருவருக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு, எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றுசேர முடியவில்லை. உறவினர்கள் சிலர் சமூக ஊடகங்கள் மூலம் சகோதரர்களை சேர்த்துவைக்க மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது.
சகோதரர்கள் இருவரும் அண்மையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கட்டாக் பூரில் உள்ள குருத்வாராவில் சந்தித்தனர்.
அப்போது இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து கண்ணீர் மல்க பேசிக் கொண்டனர். இது அங்கு இருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.

