தலைமறைவான 16 இந்தியர்களை ஒப்படைக்கக் கோரும் வளைகுடா நாடுகள்

புது­டெல்லி: குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்ட பின்­னர் ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ரசு, சவுதி அரே­பி­யா­வில் இருந்து இந்­தி­யா­வுக்கு தப்­பி­யோ­டிய 16 இந்தியர்களை ஒப்­ப­டைக்­கு­மாறு அவ்­விரு நாடு­களும் மத்­திய அர­சி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக தங்­க­ளி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­தாக சிபிஐ தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வுக்­குத் திரும்­பிய 16 பேரும் கொலை, மோசடி சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டைய வழக்­கு­க­ளுக்­காக தேடப்­பட்டு வரு­வ­தாக அவ்­விரு நாடு­களும் தெரி­வித்­துள்­ளன.

16 பேர் மீதும் தனித்­தனி வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையே உள்ள இரு­த­ரப்பு ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் தேடப்­ப­டு­ப­வர்­களை ஒப்­ப­டைக்க வேண்­டும்.

இதற்­கி­டையே, இரு வெவ்­வேறு வழக்­கு­கள் தொடர்­பாக இந்­தி­யா­வுக்­குத் திரும்­பிய இரு­வர் மீது சிபிஐ மோசடி வழக்­குப் பதிவு செய்­துள்­ளது.

கேர­ளா­வைச் சேர்ந்த ரஜ­னீஷ் தாஸ் என்­ப­வர் துபா­யில் உள்ள ஒரு நிறு­வ­னத்­தில் உதவி மேலா­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­போது, பெருந்­தொ­கையை மோசடி செய்­த­தாக வழக்­குப் பதி­வாகி உள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!