நான்கு எம்எல்ஏக்கள் தாவல்; உ.பி.பாஜகவுக்கு நெருக்கடி

நான்கு எம்எல்ஏக்கள் தாவல்; உ.பி.பாஜகவுக்கு நெருக்கடி

1 mins read
93c195d3-9cb1-4394-87d0-110bb1fd1759
சமாஜ்­வாதி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ் (வலமிருந்து 2வது) முன்­னி­லை­யில் அக்­கட்­சி­யில் இணைந்த அமைச்சர், எம்எல்ஏக்கள். படம்: இந்திய ஊடகம் (ஏஎன்ஐ) -

லக்னோ: யோகி ஆதித்­ய­நாத் தலை­மை­யில் பார­திய ஜனதா ஆட்சி நடை­பெ­றும் உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் அடுத்­த­டுத்து ஆளும் தரப்பிலிருந்து எம்எல்ஏக்கள் விலகி வரு­வ­தால் பாஜ­க­வுக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

அதே சம­யத்­தில் அகி­லேஷ் யாதவ் தலை­மை­யி­லான சமாஜ்­வாதி கட்சி வலுப்­பெற்று வரு­கிறது.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநில சட்­ட ­ச­பைக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்­டங்­க­ளாக சட்­ட­சபை தேர்­தல் நடை­பெறுகிறது.

ஒரு பக்­கம் ஆட்­சியை தக்க வைக்க பாஜ­க­வும் அதனைக் கைப்­பற்ற எதிர்க்­கட்­சி­யான சமாஜ்­வாடி கட்­சி­யும் மல்­லுக்­கட்டி வரு­கின்­றன.

இந்த நிலை­யில், முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து பாஜக முன்­னாள் தலை­வ­ரும் தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­ச­ரு­மான சுவாமி பிர­சாத் மவு­ரியா,68, முன்­னாள் எம்.எல்.ஏ.க்கள் தரம் சிங் சைனி, பக­வதி சாகர் மற்­றும் வினய் ஷக்யா ஆகி­யோ­ரு­டன் நேற்று சமாஜ்­வாதி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் யாதவ் முன்­னி­லை­யில் அக்­கட்­சி­யில் இணைத்­துக் கொண்­டார்.

இதற்கு முன்பு ஆயுஷ்­துறை அமைச்­சர் தரம் சிங் சைனி பத­வி­ யி­லி­ருந்து விலகி பார­திய ஜனதா கட்­சி­யி­லி­ருந்­தும் வில­கு­வ­தாக அறி­வித்­தார். பின்­னர் சமாஜ்­வாதி கட்சி தலை­வர் அகி­லேஷ் யாதவை அவர் சந்­தித்­தார்.

சமாஜ்­வாதி கட்­சிக்கு அவரை வர­வேற்­கி­றேன் என்­றும் அகி­லேஷ் யாதவ் டுவிட்­டர் பதி­வில் கூறி­யி­ருந்­தார்.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் தேர்­தல் நடக்க உள்ள நிலை­யில் அடுத்­த­டுத்து அமைச்­சர்­கள், எம்­எல்­ஏக்­கள் பதவி விலகுவது பாஜ­க­விற்கு தலை வலியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.