மேலும் 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்குத் தொற்று

மேலும் 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்குத் தொற்று

2 mins read
aff98deb-b244-443b-9de4-1d401f6b3792
-

புது­டெல்லி: இந்­திய நாடாளுமன்றத் ­தில் பணி­யாற்­றும் 300க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் கிருமி தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மேலும் மாநி­லங்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே, காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் வீரப்ப மொய்லி ஆகி­யோ­ருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

"மல்­லி­கார்­ஜுன கார்­கே­வின் டெல்லி அலு­வ­ல­கத்­தில் சில ஊழி­யர்­க­ளுக்கு அண்­மை­யில் தொற்று ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, கார்­கே­வுக்கு நேற்று முன்­தி­னம் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­ட­தில் அவ­ருக்­கும் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

"மருத்­து­வர்­க­ளின் அறி­வு­ரை­யின்­படி வீட்­டுத்­த­னி­மை­யில் அவர் இருந்து வரு­கி­றார். அவ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­களும் கொரோனா பரி­சோ­தனை செய்து கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றோம்," என்று மல்­லி­கார்­ஜுன கார்­கே­வின் உத­வி­யா­ளர் ரவீந்­திர கரி­மெல்லா அறிக்கை வாயி­லாக கேட்டுக் கொண்டார்.

காங்­கி­ரஸ் மூத்த தலை­வ­ரும் கர்­நா­டக முன்­னாள் முதல்­வ­ரு­மான வீரப்ப மொய்­லிக்கு, 82, கொரோனா பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இது குறித்து விளக்­கம் அளித்த அவர், "கடந்த புதன்­கி­ழமை லேசான காய்ச்­ச­லும் இரு­ம­லும் ஏற்­பட்­ட­தால் 'ஆர்­டி­பி­சி­ஆர்' பரி­சோ­தனை செய்து­கொண்­டேன். அதில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டது. எனது உடல்­நி­லையை பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள், வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக் ­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தி­னர்,'' என்­றார்.

இந்நிலையில் நாடா­ளு­மன்ற வரவு செலவு கூட்­டத் தொடர் இம்­மா­தம் 31ஆம் தேதி தொடங்­க­வுள்­ளது. இந்­தச் சூழ­லில் கடந்த வாரம் 400க்கும் மேற்­பட்ட நாடா­ளு­மன்ற ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டது.

இந்த நிலை­யில் இம்­மா­தம் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் 300க்கும் மேற்­பட்ட நாடா­ளு­மன்ற ஊழி­யர்­க­ளுக்கு தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக பிடிஐ தக­வல் தெரி­வித்தது.