'ஹெலிகாப்டர் விபத்தில் சதியில்லை'

'ஹெலிகாப்டர் விபத்தில் சதியில்லை'

2 mins read
da2b6e66-6c57-47de-bf35-930335fcec6b
டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்­தி­யா­வையே உலுக்­கிய தமி­ழ­கத்­தில் நிகழ்ந்த ஹெலி­காப்­டர் விபத்­தில் சதி வேலை இருக்கக் கார­ண­மில்லை என்று முப்­படை விசா­ர­ணைக் குழு தெரி­வித்­துள்­ளது.

இந்­திய முப்­ப­டைகளின் தலைமை தள­பதி பிபின் ராவத், அவ­ரு­டைய மனைவி மற்­றும் ராணுவ அதி­கா­ரி­கள் சென்ற ஹெலி­காப்­டர் நீல­கிரி மாவட்­டம் குன்­னூர் அருகே கடந்த டிசம்­பர் 8ஆம் தேதி­யன்று விபத்­தில் சிக்­கி­யது. இந்த விபத்­தில் பிபின் ராவத் அவ­ரு­டைய மனைவி உட்­பட 14 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

மிக­வும் பாது­காப்­பான ஹெலி­காப்­டர் விபத்­துக்­குள்­ளா­னது குறித்து ஏர்­மார்­ஷல் மன்­வேந்­திர சிங் தலை­மை­யி­லான முப்­படை விசா­ர­ணைக் குழு­வி­னர் விசா­ரித்து வந்­த­னர்.

இந்­தக் குழு சம்­பவ இடத்­துக்­குச் சென்­றும் விசா­ரணை நடத்­தி­யது. இதை­ய­டுத்து விபத்­துக்­குள்­ளான ஹெலி­காப்­ட­ரின் கறுப்­புப் பெட்டி மற்­றும் களத்­தில் கிடைத்த தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் விசாரணை அறிக்கை தயா­ரிக்­கப்­ பட்டது. இந்த அறிக்கை பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங்­கி­டம் அண்­மை­யில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

விபத்­துக்­கான கார­ணம், இனி எதிர்­கா­லத்­தில் இது­போன்று நடக்­கா­மல் இருப்­ப­தற்கான நட­வ­டிக்­கை­கள், பரிந்­து­ரை­கள் ஆகி­யவை விசா­ர­ணைக் குழு அறிக்­கை­யில் இடம்­பெற்­றி­ருந்­தது என்று தெரிய வரு­கிறது. இந்த நிலை­யில் விசாரணை அறிக்­கை­யின் விவ­ரம் வெளி­யா­கியுள்­ளது. அதில், "விசா­ர­ணை­யின்­படி இயந்­தி­ரக் கோளாறோ அல்­லது சதி வேலையோ விமா­னி­யின் கவனக்­ கு­றைவோ விபத்­திற்­குக் கார­ணம் இல்லை.

"திடீ­ரென வானிலை மோச­ மடைந்­த­போது ஹெலி­காப்­டர் அந்த மேக­மூட்­டத்­துக்­குள் சிக்­கி­யது. இத­னால் விமா­னம் திசை­மாறி 'Controlled Flight into Terrain (CFIT) என்ற ரீதி­யில் எதிர்­பா­ரா­மல் தரை­யில் விழுந்து நொறுங்­கி­யது," என்று விளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.