6,000ஐ தாண்டிய ஓமிக்ரான் தொற்று

6,000ஐ தாண்டிய ஓமிக்ரான் தொற்று

1 mins read
b38beb18-b381-45f5-b999-286107e2d5ea
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 தொற்று அதி­க­ரித்து வரும் வேளை­யில் புதிய உரு­மா­றிய ஓமிக்­ரா­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 6,000ஐ தாண்டி­யுள்­ளது. தென்ஆப்­பிரிக்­கா­வில் கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் இந்த ஓமிக்­ரான் கண்­ட­றி­யப்­பட்­டது. தற்போது இந்­தி­யா­வி­லும் ஓமிக்­ரான் அதி­வே­க­மாக பரவி வரு­கிறது. இந்­தி­யா­வில் நேற்று காலை மத்­திய சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 553 பேருக்கு புதி­தாக ஓமிக்­ரான் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்டது என்று தெரி­விக்­கப்­பட்­டது. இவ்­வே­ளை­யில் நேற்று காலை நில­வ­ரப்­படி முந்­தைய 24 மணி நேரத்­தில் இரண்டு லட்­சத்து 68 ஆயி­ரத்து 833 பேருக்கு (268,833) தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.