போகாரோ: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் எதிர்பாராத அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, படுத்த படுக்கையாகக் கிடந்த ஆடவர் ஒருவர், தடுப்பூசி போட்டதும் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவல் தெரிவித்தது. போகாரோ மாவட்டத்தில் உள்ள பேடார்வார் கிராமத்தில் வசித்து வரும் துலார்சந்த், 44, விபத்தில் சிக்கியதால் கடந்த நான்கு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவரது குரலும் போய்விட்டது. இந்த நிலையில் ஜனவரி 4ஆம் தேதி அவருக்கு கொவிஷீல்ட் முதலாவது தடுப்பூசி போடப்பட்டது. அந்த ஊசி போட்டதும் துலார்சந்தின் உடல் அசைய ஆரம்பித்தது என்று பேடார்வார் சமூக சுகாதார நிலையத்தில் பொறுப்பு மருத்துவரான டாக்டர் அல்பெல் கெர்கெட்டா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய துலார்சந்தும், தடுப்பூசி போட்டது நல்லதாப் போச்சு, என் கை, கால்களில் அசைவுஏற்பட்டது என்று கூறியுள்ளார். இதற்கிைடயே இது ஒரு மருத்துவ அதிசயம் இல்லை என்று கூறியுள்ள போகாேரா மருத்துவரான ஜிதேந்திர குமார், அவரது மருத்துவப் பின்னணியை ஆராய தனது மருத்துவக் குழுவுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
படுத்துக் கிடந்தவர் தடுப்பூசி போட்டதும் எழுந்து நடந்தார்
1 mins read
தடுப்பூசி போட்டதும் துலார்சந்த் எழுந்து நடக்க ஆரம்பித்தார் என்று கூறப் படுகிறது.படம்: இந்தியா டுடே இணையம் -

